பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சோழர் சரித்திரம்

________________

70 சோழர் சரித்திரம் ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால் குடிப்பொரு ளன்று நுஞ்செய்தி கொடித்தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே 11 என்பது, பெரிய பனையின் தோட்டினைச் சூடினோனல்லன்; கரிய கொம்பினையுடைய வேம்பினது மாலையை உடையோ னல்லன் ; நினது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; நின்னுடன் போர் செய்வானது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; ஆதலால் நம்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியன்றோ ? இருவீரும் வெல்லுதல் இயல்பு மன்று ; ஆதலால் நுமது செய்கை நும் குடிக்குத் தக்கதன்று ; இம்மாறுபாடு நும்மைப் போலும் தேர்வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும்; இது தவிர்தலே நுமக்குத் தக்கது' என்பது அதன் பொருளாகும். - இவ்வாசனை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய முதுமொழிக்காஞ்சி என்னும் துறையமைந்த செய்யுட்கள் படித்தறிந்து இன்புறற்பாலன. 'நூறு இதழ்களையுடைய தாமரை மலரின் நிரைபோல் ஏற்றத்தாழ்வில்லாத சிறந்த குடியிற்பிறந்து வீற்றிருந்தோர்களை எண்ணுமிடத்துப் புக மும் பாட்டும் உடையோர் சிலர் ; தாமரையின் இலையை யொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர் ; புலவராற் பாடப் படும் புகமுடையோர் தாம் செய்யும் நல்வினையை முடித்து, விசும்பிலே பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவர் என்று அறிவுடையோர் கூறுவர்; எந்தையே, நலங்கிள்ளி, தேய்தலுண்மையும் பெருக லுண்மையும் மாய்த லுண்மையும் பிறத்தலுண்மையும் கல்வி முகத்தால் அறியாத வரும் அறியும்படி காட்டித் திங்களாகிய தெய்வம் இயங்கு கின்ற உலகத்தில் ஒன்றில் வல்லராயினும் அல்லராயினும்