பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சோழர் சரித்திரம்

________________

சோழர் சரித்திரம் பெருநற்கிள்ளியுடன் எக்காரணத்தாலோ பகைமைகொண் டிருந்தான். அவன் தன்போலும் தாளாண்மையும் வீரமும் இலனாய் மடிந்திருந்தமையால் வெறுப்புற்று அவனைத் தனது நாட்டினின்றும் ஒட்டிவிட்டனன் போலும்? எனினும், தந்தையால் நாடிழந்தோடி வறுமையாற் புல்லரிசிக் கூழ் உண்டிருந்த பெருநற்கிள்ளி பின்பு மிக்க வலிமையும் போர்த் திறலும் வாய்ந்தவனாயினான் ; முக்காவனாட்டு ஆமூர் மல்லன் என்பானொடு மற்போர் பொருது அவனைக் கொன்று புகழ் பெற்றான். இச்செய்திகள் சாத்தந்தையாரும் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையாரும் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின்மீது அருமையாகப் பாடியுள்ள புறப்பாட்டுக் களால் வெளிப்படுகின்றன. இனி, தித்தன் என்னும் இச்செம்பியர் குரிசில் சிறந்த புலவனாகவும் திகழ்ந்தனன் என்பது இவன் பாடிய பாட் டொன்று அகநானூற்றில் இருப்பதனால் அறியப்படும். இவன் தித்தன் வெளியன் எனவும் வீரை வெளியன் தித்தன் எனவும் கூறப்படுவன். இவனது காலம் காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியின் காலத்திற்கு முற்பட்டதாகுமென்று கருதப்படு கிறது. இவனைப் புகழ்ந்து பாடினோர் பரணரும் நக்கீரருமாவர். 13. பெருங்கிள்ளி இவ்வரசன் உறையூரில் இருந்தவன் ; செங்குட்டுவன் என்னும் சோர் பெருமானுக்கு அம்மான் மகன். இவன், சோழன் கிள்ளிவளவனுக்கும் நலங்கிள்ளிக்கும் பகைவனா யிருந்த நெடுங்கிள்ளியின் மைந்தன் என்றும், இவனே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பின்பு வழங்கப் பெற்றானாவன் என்றும் கருதுவர் திருவாளர் மு. இராக