பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

சோழர் சரித்திரம்

________________

பெருங்கிள்ளி வையங்கார் அவர்கள். 125, 174-ம் புறப்பாட்டுக்களை நெடுங்கிள்ளியின் வரலாற்றோடு இயைய வைத்து நோக்கு மிடத்து, அங்கனம் கருதுவது பொருத்தமாகவே தோன்று கிறது. இவன் பெயர் பெருநற்கிள்ளியெனவும் வழங்கும். இவன் ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பொழுது சோணாட்டிலிருந்த இவனுடைய ஞா தியாசர் பலர் கூடி இவனுக்கு மாறாகக் கலகம் விளைப்பாராயினர். அதனால், இவன், தனக்குத் துணைவனாகவிருந்த மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. அப்பொழுது மலையமான் திருமுடிக்காரியின் மகனும், சோழற்குப் படைத் தலைவனாகவிருந்து சிறப்புப் பெற்றவனுமாகிய சோழியவேனாதி திருக்கண்ணன் என்பான் இவனைப் பாதுகாத்து இவன் குடை நிலைபெறும்படி செய்தான். இச்செய்தி, திருக்கண்ணனை மாறோகத்து நப்பசலையார் பாடிய புறப்பாட்டால் இனிது விளங்குகிறது. அதில், அரசிழந் திருந்த வல்லற் காலை முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு திரங்குபுன னெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னாட்டல்லல் தீர எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி யிருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையின் நிறுத்த புகழ்மேம் படும் என்று திருக்கண்ணன் பாராட்டப்படுகின்றான். இங்ஙனம் இளையனாகிய பெருங்கிள்ளிக்கு நேர்ந்த இடுக்கணைக் கேள்வியுற்றான் வீரருள் வீரனாகிய சோன்

  • சோன் செங்குட்டுவன் பக்கம் 102, 103.