பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சோழர் சரித்திரம்

________________

76 சோழர் சரித்திரம் செங்குட்டுவன் ; உடனே சோணாட்டின்மீது படையெடுத்துச் சென்று, தன் மைத்துனற்குப் பகைவராயிருந்த சோழர் ஒன்பதின்மரை ஒரு பகற்பொழுதில் உறையூரின் தெற்கு வாயிற் புறத்ததாகிய நேரிவாயில் என்னும் இடத்திற் பொருது வீழ்த்தி, அவனது ஆணை இனிது நடக்குமாறு செய்தனன். இச்செய்தி, "மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கு மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி யொருவழிப் படுத்தோய் எனச் சிலப்பதிகார நீர்ப்படைக்காதையிலும், ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை கேளி வாயில் நிலைச்செரு வென்று என நடுகற்காதையிலும் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறுங் கூற்றாக இளங்கோவடிகள் உரைத்தலால் நன்கு புல னாகின்றது. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகத்திலும், ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து" என இது குறிக்கப்பெற்றுளது. இவன் உறையூரின் கண்ணே கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாச் செய்தனன் என்பது "அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளிகோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக் கடவு ளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே " என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையாற் பெறப்படும்.