பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

சோழர் சரித்திரம்

________________

நல்லுத்தரன் இனி, இவன் மலையனைத் துணையாகக்கொண்டு சோமான் மாந்தரஞ்சோ லிரும்பொறையுடன் பொருது வென்றான் என்பது "பருத்திப் பெண்டின் உனுவ லன்ன என் இம் புறப்பாட்டினாலும், சேரமான் வெண்கோவும், பாண்டி யன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் இவனுக்கு நட்பாளர் என்பது ஒளவையார் பாடிய கேக் தன்னபாகார் மண்டிலம்" என்னும் புறப்பாட்டினாலும் கோப்படுகின்றன - இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என இவனுக்கு வழங் கும் பெயரானே இவன் அவ்வேள்வி புரிந்தனன் என்பதும் பெற்றாம். இவனைப் பாடிய புலவர்கள் பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார் என்போர். 14. நல்லுத்தரன் இவனது வரலாறொன்றும் தெரிந்திலதேனும், இவன் பாடிய ஓர் அழகிய புறப்பாட்டிலிருந்து இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்ப முடையன் என்பதும், செய்யுளியற்றுவதில் வல்லன் என்ப தும் புலனாகின்றன. அச்செய்யுள், விளைபதச் சீறிடம் நோக்கி வளைக திர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி உடைய தம் வளன் வலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென அன் றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடாகம் புலம்பவேட் டெழுந்து இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும்