பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சோழர் சரித்திரம்

________________

78 | சோழர் சரித்திரம் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையோடு இயைந்த வைகல் உளவா கியரோ 31 என்பது. விளைந்த செவ்வியை யுடைய சிறிய இடத்தை நோக்கி வளைந்த கதியாகிய உணவைக் கொண்டுபோய் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினாகித் தம் செல் வத்தை இறுகப்பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய பன்றியேறு இடைப்பக்கத்தே வீழ்ந்ததாகலின் அதனை உண் ணு தல் புல்லிதென்று கருதி அன்று அதனை யுண்ணாதிருந்து அடுத்தநாள் மலை முழையினின்றும் புறப்பட்டுச்சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச்செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ள முடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாகுக ' என்பது அதன் பொழிப்பு. கற்றறிந்தாரேத்தும் கலித்தொகையில் முல்லைக் கலி பாடினான் இவனென்றால் இவ்வரசனது புலமையின் பெருமையை யாரால் அளவிட்டுரைக்கலாகும்? இனி, குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன், குராப் பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளி முதலிய சோழ மன்னர்கள் சங்க இலக்கியங் களிற் கூறப்பட்டிருக்கின்றனரேனும் அவர்களைப்பற்றி மிகுதி யாக அறியலாவன இல்லை. சிறப்புடைய இரு சோழ வேந் தரின் வரலாறுகளே இனி இப்பகுதியில் வெளியிடற் குரிய வாகும்.