பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

சோழர் சரித்திரம்

________________

15. கோப்பெருஞ் சோழர் இவர், பண்டொரு காலத்தில் ஒரு கோழியானது யானை யொன்றைப் போரில் வென்ற இடமாதலின் கோழி ' எனப் பெயர் பெற்றதும், தொன்று தொட்டுச் சோழ மன்னர்கள் வீற்றிருந்து அரசாளப் பெற்ற தலைநகரங்களுள்ளே மிக்க பழமை பொருந்தியதும், அறங்கள் நிலைபெற்ற அவைக் களத்தைத் தன்னகத்தே கொண்டிருந்ததும் ' ஊசெனப்படுவ துறையூர் ' என ஆன்றோர் பலராலும் சிறப்பித்தோதப் பெறுவதும் ஆகிய உறந்தையம்பதியில் இருந்தவர் ; கல்விக் கடலின் எல்லை கண்டவர் ; தீஞ்சுவை கெமுமிய செந்தமிழ்ப் பாக்கள் பாடுவதிற் சிறப்புமிக்கவர் : அறத்தின் நுட்பங்களை யெல்லாம் அறிந்து தாம் அவ்வாறொழுகுவதோடு, யாவரும் அறம்புரிந்து மேன்மையுற வேண்டுமென்னும் பெரு விருப் பினர் ; புலவர் பெருமக்களிடத்துத் தாம் வைத்துள்ள அன் பாலும் மதிப்பாலும் அவர்களுடைய அன்பையெல்லாம் கொள்ளை கொண்டவர் ; அவ்வாற்றால் தோலா நல்லிசை மேலோராகிய பிசிராந்தையார், பொத்தியார் என்னும் தண் டமிழ்ப் புலவர்கள் தமக்கு ஆருயிர் நண்பர்களாக அமையப் பெற்றவர். பிசிராந்தையார் என்பவர் பாண்டி நாட்டில் பிசிர் என் னும் ஊரிலிருந்த ஒரு புலவர். அவரது பெயரிலிருந்து அவரை ஆதன் என்பானுக்குத் தந்தையார் என்றாவது, ஒரு ஆதன் றந்தையின் வழியில் வந்து அப்பெயரிடப் பெற்றவர் என்றாவது கொள்ளுதல் தகும். ஆதன்றந்தை ஆந்தையென மருவுமாறு தொல்காப்பியத்திற் கூறப்பட்டுளது. பிசிராந்தை பார் தமது வாழ்நாளி னிறுதிக் கூற்றில் தமக்கு நரையில்லாத தன் காரணத்தை வினாவிய சான்றோர்க்குத் தாம் விடை