பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சோழர் சரித்திரம்

________________

80 சோழர் சரித்திரம் யிறுத்தலாகப் பாடியுள்ள பாட்டிலிருந்து அவரது களங்க மற்ற உயரிய வாழ்க்கை நிலை புலப்படும். அது, "யாண்டு பலவாக நரையில் வாகுதல் யாங்கா கியரென வினவு தி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன் றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே என்பது. தம் மனைவி மக்கள் அறிவிலும் குணத்திலும் மாட்சியுடையராதலும், ஏவலாளர் தாம் கருதியதைக் கருதிய வாறே செய்து முடித்தலும், தம் நாட்டாசன் முறை வழு வாது குடிகளைப் பாதுகாத்தலும், தம்மூரின்கண் சான்றோர் பலரிருத்தலும் தமக்கு ஆண்டுகள் பல சென்றும் நரையில்லா திருத்தற்குக் காரணம் எனக் கூறிய அவரது உயரிய மனநிலை நமது புகழ்ச்சிக்கண் எங்கனம் அடங்குவதாகும் ? இப் பெற்றியராய பாண்டி நாட்டுப் பிசிராந்தையார்க்கும் சோழ நாட்டுக் கோப்பெருஞ்சோழர்க்கும் செப்புதற்கரிய நட்பொன் றுளதாகி வளர்ந்து வருவதாயிற்று. ஆனால் அவர்கள் ஒரு பொழுதும் ஒருவரை யொருவர் நேரிற் கண்டவரல்லர். ஒருவர் ஒருவருடைய குணங்களைக் கேள்வியுற்ற மாத்திரை யானே அவர்கள் பால் அடங்கியிருந்த உழுவலன்பு வெளிப் பட்டு அவ்விருவரையும் ஒத்த வுணர்ச்சியுடைய நட்பின பாக்கிவிட்டது. அவர்கள் ஒருவரொருவரைப்பற்றிப் பேசாத நாளும், நினையாத நாழிகையும் இருந்திருத்தல் சாலாது. பிசிராந்தையார் ஒருநாள் மாலைப்பொழுதில் தமதாருயிர் நண்பனை நினைந்து காதல் கைமிக்கு அன்னச்சேவல் ஒன்றை