பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

சோழர் சரித்திரம்

________________

கோப்பெருஞ் சோழர் விளித்துப் பாடுகின்ற பாட்டு அந்தப் பினையும் பெட்பினையும் திட்பமுறக் காட்டும். அது, " அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடு தலை யளிக்கு மொண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையன் மாலையாம் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசி ராந்தை யடியுறை யெனினே மாண்டபின் இன்புறு பேடை யணியத்தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே " என்பது. 'அன்னச் சேவலே! அன்னச் சேவலே!! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையளி செய்யும் முகம் போல மதியம் விளங்கும் மாலைப்பொழுதின்கண் யாம் செயலற்று வருந்தா நிற்கின்றேம் ; நீதான் குமரியாற்றின் பெருந் துறை யில் அயிரையை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமய மலைக்குச் செல்குதியாயின், இரண்டிற்கும் இடையிலுள்ள தாகிய சோழநாட்டை அடைந்தவிடத்து, உறையூரின்கண் உயர்ந்து தோன்றும் மாடத்திடக்தே நின் பெடையோடு தங்கி, வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே. தடையின்றிக் கோயிலிற் புகுந்து, எம் பெருங்கோவாகிய கிள்ளி கேட்க யான் பிசிராந்தையின் அடியுறை' என்று சொல்வையாயின் நின் இன்புறும் பேடை அணியத் தன் விருப்பமுள்ள அணி கலத்தை நினக்குத் தருவன்' என்பது இதன் பொழிப்பு. சோ . 6 |