பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

சோழர் சரித்திரம்

________________

கோப்பெருஞ் சோழர் 83 புல்லாற்றார் எயிற்றியனார் என்னும் புலவர்க்கு ஓர் நல்லெண் ணம் உண்டாயிற்று. அஃது அவருக்கு இயற்கையுமாகும். அருஞ்சீர்த்திப் பெருஞ்சோழரைப் போர் செய்யாது தடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம். பெருங்கோவைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவாராயினர் : 'அமரின்கட் பகைவரை அடுதல் செய்த வென்றியையும், வலிய முயற்சியையும், நில முழுதும் நிழல் செய்யும் வெண் கொற்றக் குடையினையும் உடைய வேந்தே, நின்னுடன் போர் செய்தற்கு வந்த இருவரையும் பார்க்குமிடத்து அவர்கள் நின் பகை வேந்தர்கள் அல்லர்; நீயும் அவர்க்குப் பகைவன் அல்லை ; தோன்றலே, நீ இவ்வுலத்துப் பரந்த புகழை யெய் தித் தேவருலகத்தை யடைந்தபொழுது நின்னால் ஒழிக்கப் பட்ட அரசாட்சி யுரிமை அவர்க்குரியது ; அதனையும் நீயே அறிவை ; புகழை விரும்புவோனே, நின்னுடன் போர்செய் தற் கெழுந்த சூழ்ச்சியற்ற அறிவினயுடைய நின் புதல்வர் தோற்பின் நின் பெரிய செல்வத்தை அவருக்கன்றி யாவர்க் குக் கொடுப்பாய்? நீ அவருக்குத் தோற்பின் நின்னையிகமும் பகைவர் உவக்கும்படியாக இவ்வுலகத்தே பழியை நிறுத்து வாய் ; ஆதலால் நினது மறன் ஒழிவதாக ; விண்ணோர்கள் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ளுமாறு நல்வினை செய்தல் வேண்டும்; அதற்கு விரைந்து எழுக; நின் உள்ளம் வாழ்வதாக.' இவ்வாறாக நல்லிசைப்புலவரால் தெருட்டப்பெற்றபின், பெருங்கோவின் உள்ளத்திற் பொங்கியெழுந்த சினம் இடு நீற்றாற் பையவிந்த நாகம்போல்' அடங்கிவிட்டது. எனினும் மானம் என்பது அரசர்க்கு உயிரினுஞ் சிறந்ததாதலின் அவர் பின் உயிர்வாழ ஒருப்பட்டிலர். "மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே