பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

சோழர் சரித்திரம்

________________

84 சோழர் சரித்திரம் " மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் என்பன ஆன்றோரின் முதுமொழிகளல்லவா? தம் மக்களால் தமது குலத்திற்கும் தமக்கும் பழியுண்டாதலையுன்னி உயிர் துறக்கத் துணிந்தார் பெருஞ்சோழர் . தற்கொலை செய்து கொள்வதில் பழியில்லாததொரு வழியை முற்காலத்தவர் கைக்கொண்டிருந்தனர். அதுதான் வடக்கிருத்தல் என்பது. வடக்கிருத்தல் என்றால் யாதேனும் இன்றியமையாக் காரணம்பற்றி உயிர் துறக்கத் துணிந்தவர் ஆற்றிடைக் குறை போலும் தூயதொரு தனியிடத்தையெய்தி, வடக்கு நோக்கி யிருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர்விடுதலாம். பெருங்கோவும் அங்கனமே வடக்கிருத்தலை மேற்கொள்வாராயினர். வடக்கிருக்குங்கால் உலகத்தார்க்கு அறத்தின் மேன்மையைத் தாம் தெளிந்தவாறு அறிவுறுத்திச் செல்லவேண்டுமென்று அவர்க்கு விருப்பமுளதாயிற்று. தாம் உயிர் துறக்கும் பொழுதும் உலகத்தார்க்கு உதவிசெய் வதே உயர்ந்தோரின் நோக்கமென்பதற்கு இஃதொரு சான் றாம். தாம் அறிவுறுத்தக் கருதியதனை நாம் என்றும் போற் றுவதொரு செந்தமிழ்ச் செய்யுளாகப் பாடித்தந்தனர் நம் புவிக்கரசாகிய கவிக்கரசர். அது, செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் ஆனையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனில் தொய்யா வலகத்து நுகர்ச்சியுங் கூடும்