பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சோழர் சரித்திரம்

________________

86 சோழர் சரித்திரம் உடைய காலத்து அவன் வாராதிருப்பினும் யாம் துன்புறுங் காலத்து வாரா திருப்பானல்லன்' என்றனர். சான்றோர் கட்கோ ஐயந் தீர்ந்தபாடில்லை. கோப்பெருஞ் சோழர் பின் னரும் கூறுகின்றார்: நிறைந்த அறிவினையுடையீர்! - அவன் நின்னைக் கேள்வியுற்றிருப்பதல்லது சிறிது பொழுதும் கண்ட தில்லை ; பல ஆண்டுகள் தவறாது பழகிப்போந்த உரிமை யுடையாராயினும் நீ கூறியவாறு வழுவுதலின்றி யொழுகுதல் அரிதேயாகும்' என்று கருதி ஐயுறு தொழிவீராக; அவன் என்றும் என்னைப் புறக்கணித்தவனல்லன் ; இனிய குணங்களை யுடையன் ; பிணித்த நட்பினை யுடையன் ; புகழை யழிக்கும் பொய்ம்மையை விரும்பான் ; தன் பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது ' என் பெயர் கோப்பெருஞ்சோழன்' என்று என் பெயரையே தன் பெயராகச்சொல்லும் அன்பின் உரிமையையும் உடையன்; அதன் மேலும் இப்படி யான் துயர் முறுங்காலத்து ஆண்டு நில்லான் ; இப்பொழுதே வருவன் ; அவனுக்கு இடமொழித்து வைப்பீராக என்றனர். இங்கனங்கூறிக் கோப்பெருஞ்சோழர் வடக்கிருக்கவே, பிசிராந்தையாரும் அவர் கூறியாங்கு அப்பொழுது அவன் வந்து சேர்ந்தனர். பிசிராந்தையார் போன்றே பெருங்கோ வுக்கு ஆருயிர் நண்பரும், உறையூரிலிருந்தவரும் ஆகிய பொத்தியார் என்னும் புலவர் அதனைக் கண்டார் ; அளவிட முடியாத வியப்பினையும், அடக்கவொண்ணாத துயரத்தினையும் உடையராயினர். அப்பொழுது அவர் கூறியது, "நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல் அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி