பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

சோழர் சரித்திரம்

________________

1 கோப்பெருஞ் சோழர் இசைமர பாக நட்புக் கந்தாக IS இனையதோர் காலை பங்கு வருதல் வருவனென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பில் கன்றே அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறை சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை யிழந்த விவ்வுலகம் என்னா வதுகொல் அளியது தானே --புறம் என்பது . இதன் பொருள் : ' இவ்வரசன் எத்துணையும் பெரிய சிறப்புக்களுடன் கூடியும் அவற்றையெல்லாம் கைவிட்டு இவ் விடத்தே இப்படி வரத்துணிதல் நினைக்குமிடத்து வியப்பினை யுடையது ; வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்க மமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக, நட்பே பற்றுக் கோடாக இன்னதோர் இன்னாக்காலத்து வழுவின்றி இவ் விடத்து வருதல் அதனினும் வியப்பையுடையது ; இவ்வாறு வருவனென்று துணிந்து சொல்லிய வேந்தனது பெருமையும், அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந் துளது ; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறை யும் சான்றோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற பழைய புகழையுடைய அத்தன்மையுள்ள பெரி யோனை யிழந்த இத்தேயம் என்ன துன்பமுறுங் கொல்லோ ! இதுதான் இரங்கத் தக்கது!' என்பது.