பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சோழர் சரித்திரம்

________________

88) சோழர் சரித்திரம் இங்கனம் பொத்தியார் வியந்தும் கையற்றும் கூறுமாறு சென்ற பிசிராந்தையாரும் வடக்கிருந்தனர். மற்றும் வடக் கிருந்தார் பலராவர். என்னே அன்பின் தகைமை ! அன் பென்பது பல உடம்பிலுள்ள உயிர்களை ஒன்றாக பிணிக்குந் தன்மையாற்றான் அதற்கு நார் என்று பெயர் உண்டாயிற் முதல் வேண்டும். இங்கனம் பெருங்கோவுடன் ஒருங்கே வடக் கிருந்தார் பலராகவும், அவர்க்கு உயிர் நண்பராகிய பொத்தி யார் மாத்திரம் உடன் வடக்கிருந்தாரல்லர். அதற்குக் கார ணம் அவர் மனைவி கருவுற்றிருந்தமையால் கோப்பெருஞ் சோழர் அவரைத் தடுத்து நினக்கு மகன் பிறந்தபின் வருக' என்று கூறிய மொழியை மறுக்கலாற்றாமையே யாகும். எனவே அவர் உடனுயிர் துறவாமைக்கும் நண்பன் சொல்லை மறுக்கலாற்றாத அவரது நட்புரிமையே காரணமாயிற்றென் பது தெளிவு. பிசிராந்தையாரும், பெருங்கோவும் வடக் கிருந்தமை கண்டு முறையே கண்ணகனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர்கள் இரங்கிப் பாடி யுள்ளார்கள். கண்ணகனார் பாடியது, பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து அருவிலை நன்கல மமைக்குங் காலை

  • 'புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சி தான்

நட்பாங் கிழமை தரும் என்னும் குறளுரையில் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தை யார்க்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கு மென்பதாம்' எனப் பரிமேலழகர் உரைத்தலும் காண்க.