பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

சோழர் சரித்திரம்

________________

89 கோப்பெருஞ் சோழர் ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே" - புறம் என்னும் அழகிய பாட்டாகும். பொன்னும் பவளமும், முத்தும் மணியும், நிலம், கடல், மலை என்பவற்றில் ஒன்றுக்கொன்று நெடிய சேய்மையிலிருப்பினும், அரிய விலை யினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும் பொழுது அவை ஓரிடத்துத் தோன்றினாற் போல எப்பொழுதும் சான்றோர் சான்றோர் பக்கத்தினராவர்' என்பது இதன் பொருளாம். பொத்தியார் என்னும் புலவர் தம் நண்பன் சொல்லை மறாது சென்று உறையூரைக் கண்டபொழுதும் பின்பொரு கால் அரசனது நடுகல்லைக் கண்டபொழுதும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் நெஞ்சினையுருக்குந்தன்மையன. 'செங்கோலினன், திண்ணிய அன்பினன், மகளிர்க்கு மெவ்லியன், வீரர்க்கு வீரன், உயர்ந்தோர்க்குப் புகலிடம் ; அவனை அத்தன்மைய னென்று கருதாது கூற்றம் உயிர் கொண்டுபோயிற்று ; ஆத லால் வாய்மையுடைய புலவர்களே, நம் துன்புற்ற சுற்றத்தை யும் சேர்த்துக்கொண்டு அக் கூற்றத்தை வைவோம் வாரீர்' என்று கூறுகின்றார். இவ்வாறு தம் ஆருயிர் நண்பனைப் பிரிந்து ஒருநாளும் பொறுத்திருக்கலாற்றாத பொத்தியாரும், தமக்கு மகன் பிறந்த பின்னரும் வாளா அமைந்திருப்பரோ? மகனும் பிறந்தான்; அவருஞ் சென்றார் ; சென்று நடுகல்லைக் கண்டு அவர், நிழலைக் காட்டிலும் நின்னைப் பிரியா துறையும் நின் விருப்பமுள்ள மனைவி வயிற்று மகன் பிறந்தபின் வா' எனச்சொல்லி என்னை இங்கு நின்றும் போக்கிய அன்பிலா தவனே, நின்னோடு என்னிடையுள்ள நட்பினை நீ எண்ணா திருப்பாயல்லை ; புகழை விரும்புவோனே, எனக்கு நீ குறித் துள்ள இடம் யாது? சொல்வாயாக' என்றனர். கோப்