பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சோழர் சரித்திரம்

________________

90 சோழர் சரித்திரம் பெருஞ்சோழபோ கல்லாகியும் அவர்க்கு இடங்கொடுத்தனர். அவரும் 'இன்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடை யோர் தம் முழைச் செலின், அவர் நடுகல் ஆகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்பர் ' என்று அதனை வியந்து கூறி, வடக் கிருப்பாராயினர். இவ்வரசரைப் பாடிய புலவர்கள் பிசிராங் தையார், எயிற்றியனார், பொத்தியார், பூதநாதனார் என்போர். 16. கோச்செங்கட் சோழர் சோழர் குலமென்னும் பாலாழியிற் றோன்றி அறனும் மறனும் ஆற்றலுங் குன்றாது தனிச் செங்கோலால் நடாத்தித் தம் புகழ் நிறுவிய மன்னர்களில், சைவ நன்மக்களது உள் ளத்தை முழுமணிப் பீடமாகக்கொண்டு வீற்றிருத்தற்குரியோ ருள் முதன்மையுற்றிருப்போர் கோச்செங்கட் சோழர் என் பார். அப்பெரியாரது சரிதம் சைவர்கட்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருக்கும் ஞான பண்டாரமாகிய பெரிய புராணமென்னும் திருத்தொண்டர் புராணத் திருமுறை யகத்தே மிளிர்கின்றது. அதன் சுருக்கம் பின்வருமாறு : 'புற வொன்றின் பொருட்டாகத் துலை யேறியும் முறை புரிந்த சோழ மன்னர்க்குக் தொன்றுதொட்டு உரிமைவாய்ந்த தாகிய சோணாட்டின்கண்ணே அலையால் மணி கொழிக்கும் அழகிய காவிரியாற்றின் கரையில் சந்திர தீர்த்தத்தின் பக் கத்தே பல தருக்களும் நிறைந்த குளிர் பூஞ்சோலை ஒன் றுளது. அப்பூங்காவின்கண் வெண்ணாவல் மரத்தின் கீழே தேவ தேவராகிய சிவபெருமான் சிவலிங்கமென்னும் திரு அருளுருத் தாங்கி எழுந்தருளியிருந்தனர். பழம் பிறப்பில் மேலாய தவத்தினைச் செய்ததொரு வெள்ளானை அவ்வருளுரு வைக்கண்டு அன்புமேலிட்டுக்கையால் நீரினைமுகந்துவந்து ஆட்