பக்கம்:சோழர் வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சோழர் வரலாறு



ஏற்க மகன் இல்லை. அப்பொழுது இராட்டிரகூடப் பேரரசனாக வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்பவனது உடன் பிறந்தாளான ‘ரேவகா’ என்பாளை மணந்திருந்த இரண்டாம் பூதுகன் எதிர்ப்பவர் இன்றிக் கங்க அரசன் ஆனான்.[1] இங்ஙனம் புதிதாக வந்த கங்க அரசன் இராட்டிரகூடர் உறவினனானதும், பாணரும் வைதும்பரும் இராட்டிரகூடருடன் சேர்ந்து விட்டமையும் பராந்தகன் பேரரசிற்கு இடையூறாயின.

பராந்தகன் முன் ஏற்பாடு: பராந்தகன் சிறந்த அரசியல் நிபுணன் ஆதலின், தன் பேரரசைக் காக்க முன் ஏற்பாடு செய்திருந்தான். நடு நாட்டில் ஒரு நாடான திருமுனைப் பாடிநாட்டில் திருநாவலூரை அடுத்த ‘கிராமம்’ என்னும் இடத்தில் பராந்தகன் முதல் மகனான இராசாதித்தன் பெரும் படையுடன் இருந்து வந்தான். அப்படைக்கு ‘வெள்ளங்குமரன்’ என்னும் சேர நாட்டுத் தானைத் தலைவன் தலைமை பூண்டிருந்தான். அவன் கி.பி.943-இல் பெண்ணையாற்றங்கரையில் சிவனுக்குக் கோவில் ஒன்றைக் கட்டினான். திருநாவலூர் ‘இராசாதித்தபுரம்’ எனப் பெயர் பெற்றது. இராசாதித்தனுக்கு உறுதுணையாக அவன் தம்பி அரிகுல கேசரியும் உடன் இருந்தான். இந்த முன் ஏற்பாட்டால் பராந்தகன், பாணர், வைதும்பர் என்பாரால் துன்பம் உண்டாகும் என்பதை எதிர்நோக்கி யிருந்தான் என்பதை அறியலாம்.[2]

தக்கோலப் போர்: இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணனுக்கும் சோழர்க்கும் கி.பி. 949-இல் தக்கோலத்திற்கும் கடும் போர் நடந்தது. அதற்கு முன் ஒரு முறை இராசாதித்தன் கிருஷ்ணனை முறியடித்தான். ஆனால் பின்னர் நடந்த தக்கோலப்போர் கடுமையானது.தக்கோலம் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறுகல் தொலைவில்


  1. Rice's Mysore & Coorg from Inscription, pp. 45.
  2. K.A.N. Sastry’s cholas’ vol.I, pp. 155.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/170&oldid=491141" இலிருந்து மீள்விக்கப்பட்டது