பக்கம்:சோழர் வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

251



கைப்பற்றச் சாமுண்டராயனைப் பெரும் படையுடன் அனுப்பினான். இதனை உணர்ந்த வீரராசேந்திரன் கூடல் சங்கமத்திலிருந்து நேரே சென்று பகைவரை வென்று வேங்கியை மீட்டு விசயாதித்தனிடம் கொடுத்தான். இது சென்ற பகுதியிலே கூறப்பட்டதன்றோ?

அதிராசேந்திரன்: வீரராசேந்திரன் கி.பி.1059-1070-இல் இறந்தான். அவன் மகனான அதிராசேந்திரன் பரகேசரி என்னும் பட்டத்துடன் அரசன் ஆனான். அவனை அரசனாக்கிய பெருமை சாளுக்கிய விக்கிரமாதித்தற்கே உரியது. அவன் வீரராசேந்திரன் இறந்தவுடன் காஞ்சிக்கு வந்தான் பின் கங்கைகொண்ட சோழபுரம் சென்றான்; தன் மைத்துனனான அதிராசேந்திரற்கு முடிசூட்டி ஒரு திங்கள் தங்கி இருந்தான்; பிறகு தன் மைத்துனன் அச்சமின்றி நாடாள்வான் என்று எண்ணித் தன் நாடு மீண்டான்.

முடி சூடல் : அவன் சென்ற பிறகு சோணாட்டில் குழப்பம் உண்டாயிற்று. அக்குழப்பத்தில் அதிரா சேந்திரன் கொல்லப்பட்டான். நாடு அல்லலுற்றது. இதனை அறிந்த குலோத்துங்கன் வேங்கிக்கும் வடக்கே சக்கரக் கோட்டத்தில் போரிட்டிருந்த குலோத்துங்கன் சோழ நாட்டை அடைந்தான்; கி.பி. 1070-இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்டான்: வேங்கி நாட்டைத் தன் சிறிய தந்தையான ஏழாம் விசயாதித்தன் ஆட்சியில் விட்டான்.


முதற் குலோத்துங்கன் சே அவனைப்பற்றிய வரலாற். ஒருவாறு கூறும், விக்ரமாங்ச கலிங்கத்துப் பரணி ஒருவாறு

விளக்கித்தடை விடைகளை அவருள் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியார் வரைந்துள்ள முடிபே பாராட்டத்தக்கது. Vide his `cholas’ Part I, pp. 338 - 358

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/253&oldid=1406604" இலிருந்து மீள்விக்கப்பட்டது