பக்கம்:சோழர் வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

சோழர் வரலாறு



3.பூமேவிவளர் 4. பூ மன்னு பதுமம் 5. பூ மேவு திருமகள் 6.பூ மன்னு யாணர்.

சிற்றரசர் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்து இருந்த சிற்றரசருள் குறிப்பிடத்தக்கார் சிலர் ஆவர் :

1. விக்கிரம சோழன் காலத்தில் இருந்த செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் மகன் அம்மையப்பன் கண்ணுடைப் பெருமாள் ஆகிய விக்கிரம சோழக் சாம்புவராயன் ஒருவன்[1]. இம்மரபரசர், ஆளும் அரசன் பெயரை வைத்துக் கொள்ளல் மரபு என்பது தெரிகிறது.

2. தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருமாணிக்குழி என்னும் இடத்தில் இருந்த மோகன் ஆட்கொல்லி என்ற குலோத்துங்க சோழக் காடவராயன் ஒருவன். இவன் படிப்படியாக உயர்நிலையை அடைந்தான் என்பது இவன் கல்வெட்டுகளால் விளக்கமாகிறது. இவன் திருநாவலூர், திருவதிகை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) முதலிய இடங்களிலுள்ள சிவன் கோவில்கட்குத் தானங்கள் செய்துள்ளான். இவன் ‘ஆளப்பிறந்தான் கச்சிராயன், பைந்நாக முத்தரையன், அரசநாராயணன், ஏழிசைமோகன், என்ற சிறப்புப் பெயர்களைப் படிப்படியாகக் கொண்டான்[2]. இவன் திருமுதுகுன்றத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டு ‘ஏழிசை மோகன்’ என்றழைத்தான்; அப்போது ‘காடவர் ஆதித்தன்’ என்று தன்னை அழைத்துக் கொண்டான். கி.பி.300 முதல் கி.பி.900 வரை தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட பல்லவர் வழிவந்த இவன், படிப்படியாகத் தன் அலுவல் முயற்சியால் உயர்நிலை அடைந்தமை இவனுடைய பட்டங்களால் நன்குணரலாம்[3]. இப்பெரியவன் வழி வந்தவனே


  1. 302 of 1897
  2. 157 of 1905
  3. 374 of 1902, 391 of 1921; 45,46 of 1903
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/288&oldid=493114" இலிருந்து மீள்விக்கப்பட்டது