பக்கம்:சோழர் வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

சோழர் வரலாறு



என்றும் வழங்கப்பட்டான்[1]. இச் செங்கேணித் தலைவர்க்கும் காடவராயர்க்கும் நெருங்கிய உறவுண்டு. 6.புதுக்கோட்டைச் சீமையில் குலோத்துங்க சோழக் கடம்பராயன் என்பவன் ஒருவன்[2]. 7. சேந்தன் கூத்தாடுவான்’ என்ற இராசராச வங்கார முத்தரையன் என்பவன் பாடிகாவல் தலைவன் இவன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘திட்டகுடி’யில் இருந்தவன்.[3] 8. தெலுங்கு நாட்டுச் சிற்றரசருள் கரிகாலன் மரபினர் எனக் கூறிக்கொண்ட ‘திரிபுவன மல்ல தேவன் சோழ மகாராசன் ஒருவன்; ஜிக்கிதேவ சோழ மகாராசன் மற்றொருவன். இவரன்றிக் கோணராசேந்திர லோகராசன், கொண்ட பருமட்டி புத்தராசன், குலோத்துங்க இராசேந்திரன் சோடையன், கொட்டாரி எர்ரம நாயகன் சனகவர்மன்’ முதலியோர் நெல்லூர் முதல் வேங்கிவரை பரவி இருந்த சிற்றரசர் ஆவர்.

அரசன் விருதுப் பெயர்கள்: இவன், இராசராசன் உலாவில் கண்டன், வீரதயன், விரோதயன் என்ற பெயர்களை உடையவனாகக் காணப்படுகிறான். உலாவிலும் கல்வெட்டுகளிலும் இவன் ‘சோழேந்திர சிம்மம்’ என்பதைச் சிறப்பாகப் பெற்றவன். இவன், கல்வெட்டுகளில் ‘இராச கம்பீரன், எதிரிலி சோழன், நெறியுடைச் சோழன்’ என்ற விருதுகளையும் பெற்றுள்ளான்.

அரச குடும்பம் : இராசராசனது பட்டத்தரசி அவனிமுழுதுடையாள் என்பவள். மற்ற மனைவியர் ‘புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள் என்பவர்[4]. இரண்டாம் இராசரர்சனுக்கு மகப்பேறு இல்லை என்பர்.


  1. 168 of 1918, 52 of 1919, 244 of 1901
  2. 355 of 1904
  3. 16 of 1903
  4. 16 of 1903, 369 of 1911; Vide 219 of 1901, 538 of 1 104 உலகுடை ‘முக்கோக் கிழான்’ என்பது பட்டத்தரசியைக் குறிப்ப தென்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/296&oldid=1234228" இலிருந்து மீள்விக்கப்பட்டது