பக்கம்:சோழர் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
39
 

    “தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை”

- சிலப்பதிகாரம்

    “வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
    தூங்கும் எயிலும் தொலைத்தலால்”

- பழமொழி

    "தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்”

- க. பரணி

    "...................... கூடார்தம்
    துங்கும் எயில் எறிந்த சோழனும்”

- மூவருலா


5. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி
(கி.மு. 290 - 270)

இவன் காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர் என்பது பல பாக்களால் அறியக் கிடக்கும் உண்மை ஆகும்.[1]

சந்திரகுப்த மோரியன் காலத்துப் பேரமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில், தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடுரியங்கள், கருநிறமுள்ள பாண்டிய நாட்டுச் சால்வைகள், மதுரை மெல்லிய ஆடைகள் முதலியன சந்திரகுப்தன் பண்டாரத்திற்கு அனுப்பப்பட்டன’ என்று வரைந்துள்ளமை,[2] தமிழகத்திற்கும் மகதப் பேரரசிற்கும் இருந்த தொடர்பை


  1. குறுந்தொகை 75; அகம் 251-265
  2. P.T.S. Iyengar’s ‘History of the Tamils’ pp. 141-141.