பக்கம்:சோழர் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சோழர் வரலாறு



பொத்தியார் புலம்பல்: அரசன் வடக்கிருப்பின் அவனுடன் பலர் வடக்கிருந்து உயிர்விடல் பண்டை மரபு.[குறிப்பு 1] ஆதலின் கோப்பெருஞ் சோழனுடன் புலவர் பலர் வடக்கிருந்து உயிர்விட்டனர். ஆனால் பொத்தியார் ஒருவர் மட்டும் வடக்கிருந்திலர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந்தமையால், கோப்பெருஞ் சோழனே அவரைத் தடுத்து, நினக்கு மகன் பிறந்தபின் வருக என்று கூறிவிட்டனன். இதனால் புலவர் தம் நண்பன் சொல்லை மீறாது திரும்பிவிட்டார். அவர் திரும்பிப் போகையில் உறையூரைக் கண்டார். உடனே அவருக்கு அரசன் நினைவுண்டாயிற்று. அப்புலவர் பெருமான்,

“பெருஞ் சோறு படைத்துட்டிப் பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தையுடைய பாகன், அந்த யானை இருந்த கூடத்தில் உள்ள கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மை போல - சிறந்த தேர்வண் கிள்ளியை இழந்த பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து யான் கலங்குகின்றேன்.”[1]

என்று கூறிக் கண்ணிர் உகுத்தார்.

பொத்தியார் பின்னொருகால் கோப்பெருஞ் சோழன் இறந்த இடத்தே நடப்பட்ட நடுகல்லைப் பார்த்து வருந்தி,

“இவன் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழுடையவன்; கூத்தர்க்குக் கொடுத்த மிக்க அன்பினையும் உடையவன்; அறத்திறன் உடையோர் பாராட்டும் நீதி நூற்படி நடத்தும் செங்கோலை உடையவன்; சான்றோர் புகழ்ந்த திண்ணிய நட்பை உடையவன்; மகளிரிடத்து மென்மையை உடையவன், வலியோரிடத்து மிக்க


  1. சுமேரிய நாட்டில் அகழப்பெற்ற அரசர் புதைகுழிகளை ஆய்ந்த அறிஞர் இம்முடிவிற்கு வந்துளர், Vide H.R., Hall’s ‘Ur of the Chaldees.’
  1. புறம், 220.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/94&oldid=481352" இலிருந்து மீள்விக்கப்பட்டது