________________
1902-ம் வருஷத்தில் திருவனந்தபுர ஸமஸ்தானத்தே சாஸன விலாகா வொன்று புதியதாக ஏற்படுத்தப்பட்டபோது, அதன் தலைவ ராக அக்கட்டாசரால் நம் இபாயரவர்கள் நியமிக்கப்பெற்றனர். அவ்வுத்தியோகத்தைத் தம் ஆயுள் முடிவுவரை மிக்க சிரத்தை யுடனுர் திறமையுடனும் நிர்வகித்துப் புகழ்பெற்றனர். இக்காலங் களில் இர யாவர்களால் அச்சிறியநாட்டிற் கண்டறியப்பட்ட சிலா தாமிரசாஸனங்களும் சரித்திரவுண்மைகளும் பலவாகும். இப் போதைப்போல மலையாளபாஷை என்று வேறுபட்டிராமல், சில நூற்றாண்டுகட்கு முன்வரை தமிழ்மொழியுந் தமிழெழுத்துக்களுமே அந்நாட்டுக் குரியனவாயி ருந்தன என்பதும், அந்நாட்டின் தலைவர் களும் குடிகளும் தமிழ்மக்களின் வேறல்லரென்பதும் பிறவும் இவ ரால் வெளிப்படுத்தப்பட்ட 'திருவாங்கூச் சாஸனத் தொடர் (Travancore ArchaeologicalSeries) என்ற புத்தகத் தொகுதிகளிற் பாக்கக் காணலாம். பண்டைத் தமிழெழுத்துக்கள் காலந்தோறும் வேறுபட்டு வழங்கிய முறையை விவரப்படங்களுடன் நன்கு விளக்கி இவால் அந்நூற்றொகுதியில் எழுதப்பெற்ற சிறந்த ஆராய்ச்சியுரை, நம்மவ பொவ்வொருவரும் அறியும்படி தமிழில் மொழிபெயர்த்தற் குரியது. இவ்வுத்தியோக்காலத்தே சாஸனபரிசோதனையுடன் சிற்பத் துறையினும் இராயரவர்கள் விசேட ஊக்கமெடுத்து உழைத்துவந்தார் கள், இதன்பொருட்டு வடமொழியில் கிடைத்தற்கரிய சிற்ப நூல்களையும் ஆரமங்களையும் சேகரித்து ஆராய்ச்சி செய்யலாயினர் இதன் பயனாக 'விக்கிரகதத்துவம் (Elements of Hindu Ichonography) என்ற பெருநூற்றொகுங்க ளிரண்டு இராயரவர்களால் எழுதி வெளிப்படுத்தப் பட்டன. நம் தேசத்துக் கோயில்களிலுங் கற்கட்டிடங்களினும் அமைந்த விக்கிரகங்கள் சிலைகள் முதலியவற்றின் சிற்ப தத்துவங்களை, அவற்றின் சரிதக்குறிப்புக்களுடனும் உருவப்படங்களுடனும் பாகுபட விளக்கி இவரால் அழகாகப் பதிப்பிக்கப்பட்ட இந் நூல், உலகமுழுதும் புகழத்தகுஞ் சிறப்புடையதாகும். சிற்பம் சரித்திரம் சித்திர முதலிய கலைகளில் வல்ல இராயரவர்கள்போலும் சிறப்பியல்புடையார்க்கல்லது இத்தகைய செயலை முடிப்பது இயலாததென்பது திண்ணம். இராய பவர்கள் திருவரங்கத் திருப்பதியிற் பிறந்து வளர்ந்தவராதலால்