பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தது. இத்துறையில் இவர்க்கு இயற்கையாகவே அவா மி தந்திருந்த மையால், அதற்கேற்ற களமாகிய இராஜாங்க சாஸன விலாகாவில், 1902 ம் ரூ ஓர் உத்தியோகத்தில் அமர்ந்தனர். ஆனால் அதனை இவர் நெடுங் காலம் வகிக்க விரும்பவில்லை. உற்சாகமிகுதியும் உழைப்புமுள்ள இளைஞராயிருந்தமையின், அவ்வுத்தியோகத்தினின்றும் விலகித் தம் சொந்தத்துறையாகவே சாஸனபரிசோதனையை நடத்தலானார். அதற் காகத் தம் கைப்பொருளையும் பொருளாகக் கருதாமல் நாட்டின் பலபாகன் கட்குஞ் சென்று, பிறர் காணாத சாஸனங்களைத் துருவிக் கண்டு சரித் திர நுட்பங்கள் பலவற்றை வெளியிட்டுவந்தனர். ஆங்கிலபாஷையில் மட்டுமன்றித் தாம் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டவர்க்கு உபகாரமாகத் தமிழிலும் அரியவியாசங்களெழுதிச் செந்தமிழ்ப்பத்திரிகைவாயிலாக உதவினர். இவர் எழுதிப்போந்த ஆராய்ச்சிகள், அப்பத்திரிகையின் பல தொகுதிகளையும் சிறப்பித்துள்ளமை தமிழ்மக்கள் அறிந்ததே. நாட்டில் மறைந்து கிடந்த ச' ஸனங்களினின்று சரித்திவிஷயங்களைத் திரட்டியெழுதுவதில், இராயவர்கட்கி ருந்த உற்சாகமும் ஆற்றலும் யாவரும் புகழத்தக்கவை. சாஸனபரிசோதனைக்கென்றே இவர் பிறவி அமைந்திருந்தது என்று நாம் சொல்லுதல் புனைந்துரையாகாது அத் துறைக்கு இன்றியமையாத வடமொழிஞ'னமும் தமிழ் தெலுங்கு முதலிய தென்னாட்டு மொழிகளில் உணர்ச்சியும் இவர்க்கு வேண்டிய வளவுக்குமே லிருந்தன. அசோக சக்காவர்த்திகாலமுதலாகயுள்ள சாஸனங்களின் அக்ஷாதத்துவங்களை இவர்போல அவ்வளவு நுட்ப மாகப் பரிசீலனை செய்த அறிஞர், மிகச் சிலரே என்னலாம். பிறர்க்கு உருத்தெரியவாராத படிஞ்ச' ஸனத்தை இவர் பார்க்க நேரும்போது, வருத்தமின்றி விரைவாக அதனைப் படித்தறிவதுடன் அதன் எழுத் தமைதி கொண்டே அச்சாஸனம் இன்ன காலத்தது என்று தெளிவாகக் கூறவும் வல்லர். இவர் பெற்றிருந்த சித்திரத்தொழிற் றிறமை, இவரது சரித்திர வாராய்ச்சித் துறையைப் பெரிதும் அலங்கரித்து நின்றது . பழைய செய்திகளைக் குறிக்கும் பிரதிமைகளையோ சிலைகளையோ இவர் காணநேரின், அவற்றின் பி திகளெடுத்தற்குரிய கருவிகளினுதவி யின்றியே உள்ளது உள்ளபடி தங்கையா லெழுதிவிடும் விசித்தி சக்தி யுடையவர். புகைப்படம் எடுப்பதிலும் சிறந்த பரிசயம் இராயவர்கட் இருந்தது.