பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூலாசிரியர் வரலாறு. பண்டையோர் வாழ்ந்த பரிசதனைச் சாதனத்தாற் கண்டுலகோர் மெச்சக் கணித்துரைத்த- பண்டிதனாக் கோதற்ற கட்டழகன் கோபிகா தன் குணங்கள் ஓதற் குரித்திவ் வுலகு. இந் நூலின் ஆசிரியராகிய ஸ்ரீமான். கோபிநாதராயரவர்கள், தம் பூகவுடம்பினின்றும் நீங்கிச் சிலவாண்டுகளாயினும் புகழுடம்போடு நம் முன் நிற்குந் தென்னாட்டு உத்தம மக்களுள் ஒருவராய் விளங்கு கின்றார்கள். பண்டையோர் சரித்திரங்கள் பலவற்றைக் கண்டெழுதி வந்த உபகாரியாகிய இவரது குணவிசேடங்கள், நம்மவரால் அறிந்து சொள்ளத்தக்கனவாதலால், இவரது வாழ்க்கைபற்றித் தெரிந்த செய்தி களை ஈண்டுக் குறிப்பிடுவேன். சோழமண்டலத்தைச் சார்ந்த துறையூரினின்றும் ஸ்ரீரங்கஷேத் திரத்தில் வந்து வசித்த மகாராஷ்டிர மாத்துவப்பிராமணரது உயர்ந்த குடும்பமொன்றில், இவர் 1872-ம் வருஷம் பிறந்தவர். திருச்சிராப் பள்ளியிலுள்ள ஆங்கிலக் கல்லூரியிற் கல்விபயின்று இளவயதில் பி.ஏ., பரீக்ஷையிற்றேறிப் பின் இரசாயனசாஸ்திரத்தில் (Chemistry) எம் 7., என்ற பெரும் பட்டத்தை 1899-ம் ஆண்டிற் பெற்றார். தாம் கற்றுத்தேறிய கலையுண 10வாடு, ஓவியத்துறையிலும் அதிபாலிபத்தே இவர்க்குச் சிறந்த பயிற்சி அமைத்திருந்தது. அக்காலத்தே இவரெழுதிய அழகான வர்ணசித்திரமொன்றன் சிறப்பைநோக்கி, அத்துறைவல்ல சபையாரால் இவர்க்குப் பொற்பதக்கமொன்று பரிசளிக்கப்பட்டது. அங்கனம் மதிக்கப்பெற்ற சித்திரப்படம், சென்னைக் கண்காட்சிச் சாஃப யுள் இப்போதும் யாவருங் காண வைக்கப்பட்டுள்ள ஒ. இக்கலைவன்மைக ளுடன், சாஸனபரிசோதனைத்திறம் இவர்க்கு மூன்றாவதாக அமைந்த சிறப்பாகும், அறிவாகிய கடலில் தம் ஆயுண்முழுதுந் திளைத்தாடு தற்கு இவர் கையாண்ட அறை, இச் சரித்திர வாராய்ச்சியாகவே இருக்