அனுபந்தம் II. கோவிராஜ கேசரி வர்ம்மரான உடையார் ஸ்ரீ ராஜமகேந்திர தேவர்க்கு யாண்டு. வீரராஜேந்திர தேவன். திருவளர் திரள்புயத் திருநில வலையந் தன்மணிப் பூணெனத் தாங்கப் பன்மணிக் கொற்றவெண் குடைநிழல் குவலயத் துயிர்களைப் பெற்ற தாயினும் பேணி மற்றுள வறைகழ லரையர்த னடிநிழ லொதுங்க வுறைபிலத் துடைகலி ஒதுங்க மிறைசெய்து விரைமலர்த் தெரியல் விக்கலன் றன்னொடு வரிசிலைத் தடக்கை மாசா மந்தரைக் கங்கபாடிக் களத்திடைநின்றுந் ங்கபத் திரிபுகத் துரத்தியாங்கவர் வேங்கைநன் னாட்டிடை மீட்டுமவர் விட்ட தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச் செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ னொருமக ளாகிய இருகையன் றேவி காகவை யென்னுந் தோகையஞ் சாயலை மூகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர் மூன்றாம் விசையினு மேன்றெதிர் பொருது பரிபவந் தீர்வனஎனக் கருதிப் பொருபுனல் கூடல் சங்கமத் தாகவ மல்லன் மக்களாகிய விக்கலன் சிங்கண னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை மன்னருந் தாலும் பின்னடுத் திருந்து வடகட லென்ன வகுத்தவத் தானையைக் கடகளி றொன்றாற் கலக்கி அடல்பரிக் கோசல சில்களைக் கொடிபட முன்னல் அசிவேள் களிற்றொரே ஆணித்துக் கெசவு
பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/108
Appearance