அனுபந்தம் II. மட்டவி ழலங்கல்மொட் டையனும் திண்டிறல் நன்னி னுளம்பனு மெனுமிவர் முதலியர் எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி வன்னிய ரேவனும் வயப்படைத் துத்தனுங் கொன்னவில் படைக்குண்ட மய்யனும் என்றின்ன வெஞ்சன வரைசரோ டஞ்சி சளுக்கி குலங்குலை குலைந்து37 தலைமயிர் விரித்து வெந்நுற்" றொளித்துப் பின்னுற நோக்கி கால்பரிந் தோடி மேல்கடற் பாயத் துரத்திய பொழுதச் செருக்களத் தவன் விடு சத்துருபயங் கரன்கர பத்திரன்மூல பத்திர ஜாதி பகட்டரை சநேகமு மெட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும் வராகவெல் கொடிமுதல் ராஜபரிச் சந்தமும் ஒப்பில்சத் தியவ்வைசாங் கப்பையென் றிவர்முதல் தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு மினையன3' பிறவு முனைவயிற் கொண்டு விஜையாவிஷேகம் செய்துதென் றிசைவயிற் போர்ப்படை நடாத்திக் கார்க்கட விலங்கையில் விறற்படைக் கலிங்காமன் வீரசலாமேகனைக் கடகளிற் றொடுமகப்படக் கதிர்முடி கடிவித் திலங்கையர்க் கிறைவன் மானா பரணன் காத விருவரைக் களத்திடைப் பிடித்து மாப்பெரும்புகழ்மிகவளர்த்தகோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு. ராஜகேசரி ராஜமகேந்திர தேவன். திருமகள் விளங்க விருநில மடந்தையை ஒருகுடை நிழற்கீ ழினிதுநிற்பப் புணர்ந்து தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய (37) குலகுலகுலைந்து (39) மேனையன (38) வென்னுற் (40) திலங்கையிற்
பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/107
Appearance