பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இரண்டாம் அதிகாரம். சோழவமிசத்தரசர்களுள் இராஜகேசரி, பரகேசரி, என்னும் பெயர்கள் அடுத்தடுத்துத் தரிக்கப்பட்டுவந்தன. அஃதாவது, பாந் தகன் இராஜராஜன், இராஜேந்திரன் என்ற மூன்று தலைமுறையாரை எடுத்துக்கொள்வோம். இவர்களிலே பாட்டனாபே பாந்தகன் (பாகே சரி என்னும் பட்டந்தரித்திருப்பின், இவன்மகன் இராஜராஜன், இராஜ கேசரியென்னும்பட்டம் தரிக்கவேண்டும் ; பெயானான இராஜேந்திர சோழன், பரகேசரியாவான். இவ்வாறு இவ்விருபெயர்கள் மாறிமாறி வந்ததென்னும் விஷயம் அவசியமாகத் தெரியவேண்டும். ஏனெனில், ஒருபெயரே பலவரசர்கள் தரித்திருப்பின், இவர்களில் முன் பின்னவர் கள்யாவர் என்பதும், இடையில்யாரேனும் பட்டம்பெற்றனபோவென்ப தும் இராஜூகசரி, பாகேசரியென்னும் பெயர்களால் ஊகித்தறியலாம். எவ்வாறெனில், இராஜேந்திரசோழன் என்னும் பட்டம் தரித்திருந்தவர் களில் முக்கியமானவர்களிருவர். அவர்களில் முதல்வன் பாகேசரி. இவன் பெயானாகிய (தௌஹித்தின்.--) இரண்டாம் இராஜேந்திரன் இராஜகேசரியாயிருந்தான். சரியான வழியாய் அடுத்தடுத்துப்பட்டத் துக்கு வந்திருப்பின் இரண்டாமவனும் பாகேசரியாகவேண்டும்; ஏனெ னில், பாட்டன் பாகேசரி, தகப்பன் இராஜகேசரி, தான் பரகேசரியாக வேண்டுமல்லவா? அவ்வாறன்றி, இவன் இராஜகேசரியாயிருத்தலின், இவன் சரியான முறையில்பட்டத்துக்கு வந்தவனல்லன் : இவனுக்கு முன் ஒரு பாகேசரியாவ தாண்டிருக்கவேண்டும். என்று சங்கிக்கலாம். சரி யான வழியில் பட்டம் பெற்றவனல்லன் என்பது, பின் வரும் இவன் சரித்திரத்தால் விளங்கும். விஜயாலயன் என்னும் சோழசக்கரவர்த்தி தஞ்சாபுரிபைப் பிடித் துக்கொண்டு அதை இராஜகானியாக்கிக்கொண்டான். இவன் கால முதல், முதலிராஜராஜன் காலம் வரையிலும் இதுவே இராஜதானியா யிருந்தது. தஞ்சாவூரில் விஜயாலயன் ஜர்க்கைக்கு ஓர் கோயில் கட்டுவித்தான்.

  • Eg. An. Rep. for 1905-6. P. 67.

- - -