பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இவன் மகன் முதல் ஆதித்தன்; இவன் காலத்துத்தான், நிருப துங்கபல்லவனுக்கும், சோழபாண்டியர்களுக்கும் அரைசூர், வேம்பில், திருப்புறம்பிய முதலிய இடங்களிற் போர் நடந்ததில் சோழபாண்டியர் கள் சுவாதீனமடைந்தார்கள். இதனை, சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "கருமையாற்றருமனார் தமர்நம்மைக்கட்டியகட்டறுப்பிப்பானை பருமையாந்தன்னுலகந்தருவானைமண்ணுலகங்காவல்பூண்ட உரிமையாற்பல்லவர்க்குத்திறைகொடாமன்னவரைமறுக்கஞ் செய்யும் பெருமையார்புலியூர்ச்சிற்றம்பலத்தெம்பெருமானைப்பெற்றாமன்றே.” என்று திருவாய்மலர்ந்தருளினார். நிருபதுங்கனாகிய அபராஜி.தவன்மனுக்குத் துணையாய்வந்த கங்க வரசனாகிய பிரதிவிபதியென்பவன் திருப்புறம்பியத்துப் போரில், வர குணபாண்டியனாற் கொல்லப்பட்டான். ஆதித்தனுக்கு முதற்பராந்த கன்; கன்னரதேவன் என இருபுதல்வரிருந்தனர். மூன்றாம் அதிகாரம். ஆதித்தன் மகனாகிய பாந்தகனென்பவன் கி. பி. 907-ல் முடி சூட்டப்பட்டான். இவ்வரசனுக்கு வீரநாராயணனென்றோர் மறுபெய ருண்டு. இவன், “மதுரைகொண்ட கோப்பரகேசரி" யென்றே எப் பொழுதும் குறிக்கப்படுவான். இவன் மதுரையை ஜயித்தபோது அவ்விடத்து அரசாண்டு வந்தவன் இராஜசிம்மபாண்டியன். இவ் வரசனுக்கு, இலங்கைத் தீவை அரசாண்ட ஐந்தாங்காசியபன், தன் சே னைகளைக் கொடுத்து, ஒரு சோழனோடு போர்புரிய உதவிபுரிந்தனன். இவ்வாறு எதிர்க்கப்பட்டசோழன் பராந்தகனே. பிறகு தனக்கு விரோ தமாய், பாண்டியற்கு உதவிபுரிந்த காசியபனது நாட்டையும் ஜயித்துத் தன்னடிப்படுத்தினான். இராமனைப் பால் இலங்கையைப் பிடித்ததற் காக இவன் சங்கிராம ராகவன் என்னும் காரணப்பெயர் பூண்டான். இதைகாரணத்தால், இவன் “மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பா கேசரி", என்று அழைக்கப்படுதலுமுண்டு. • தேவாரம், கோயிற் பதிகம்-UT-4,