பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம், கக கன்னாதேவர்க்கு யாண்டு" என்றாரம்பித்த சாஸனங்கள் சோணாட்டின் வடபாகங்களிற் பற்பல விடங்களிலும் காணப்படுகின்றன. இக் காலத்தே கண்டராதித்தனும் இவன் றம்பி அரிஞ்சயனும், ஒருவாறு, மிகுந்திருந்த சோழநாட்டை ஆண்டுவந்திருக்கவேண்டும். ஆயின் இவர்காலத்து. சாஸனங்கள் அன்றும் காணோம். அரிஞ்சயனுக்கு அரிகுலகேசரியென்னும் மறுபெயருமுண்டு. கன்னரதேவன் ஆளுகையில், ஜீகை தியடைந்திருந்த பல்லவ வம்சம் மறுபடியும் சிறிது தழைக்கத் தொடங்கியது. நந்திவர்மன் புதல்வனும் நிருபதுங்கன் தம்பியுமாகிய கம்பவர்ம்மனென்பவன், தன முன்னோர் அரசாண்ட நாட்டிற் சிற்சிலபாகங்களைக் கைப்பற்றிக்கொண்டு, அத்திமல்லன் பிரதிவிபதி. முத சியவர்கள் துணையால் அரசாளத் தொடங்கினான். இவ்வாறு பதினெட்டு வருஷகாலமாவது நடந்திருக்க வேண்டும். ஐந்தாம் அதிகாரம். கன்னரதேவன் உத்தேசம் 971-3. பி. யிலிறந்தான். இவன் பின் பட்டந்தரித்தவர்கள், கொட்டிகதேவனும் இரண்டாம் கக்கராஜனும். இவர்கள், முறையே ஒன்று இரண்டு வருஷங்கள் அரசாண்டார்கள். அதற்குள் மேனாட்டுச்சாளுக்கியர் (குந்தளர்) இரட்டராஜ்யத்தைத் தாக்கி, அதனைத் தமமாட்சப்படுத்தினார்கள். அப்பொழுது சோழரும் சுவாதீனமடைந்தனர். கண்டாதித்தனும், அரிஞ்சயனும் அரசாண்ட பிறகு, பின் னவனமகனாகிய இரண்டாம் பராந்தகன் சோழசக்கரவர்த்தி யானான. இவனுக்குச் சுந்தரசோழன் என்னும் மறுபெயர் ஒன்றிருக் தது. இவன அரசாட்சியில், இவன் சேவூர் என்னுமிடத்தில் யுத்தஞ் செய்தானென்று மாத்திரம் தெரிகிறது. இதில் இவன் ஒருகால் இறந்து போயிருக்கவேண்டுமென் றுந் தோற்றுகிறது. ஏனெனில், இக்காலத்தில் அரசாண் வந்த வீரபாண்டியலென்பவன், சோழன்றலை கொண்ட வீரபாண்டியனென்று தன் புகழைக்கூறிக்கொள்ளுகிறான். ஆதலால் சேவூர்ப் போர் இவனோடேயே நடந்திருக்கவேண்டும். இவ் வரான இவன் பிரஜைகள் மனுவின் அவதாரமென்று பாவித்து

  • Ep. Ind. Vol. VII, I. 193 & 194. tTiruvalangadu I'lalos of Thajoudrucholuderd, Aatu p. 1.