பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூ சோழவமிச்சரித்திரச்சுருக்கம். வந்தார்கள். இவன் மனைவி கோளராஜன் மகள். இவள் பெயர் வானவன்மாதேவி. தன்கணவன் பராந்தகனிறந்ததும், வானவன் மாதேவி ஸஹகமனஞ் செய்தாள். பராந்தகனுக்குப் பொன்மாளிகைத் துஞ்கிய தேவர்" என்றோர் காரணப் பெயருமுண்டு.* இவனுடையதும், இவன் பத்தினியுடையது மான படிமங்களைச் சமைத்துத் தஞ்சாவூர் இராஜராஜேசுவரத்தில் எழுந்தருளுவித்து, பூசை நைவேத்தியங்களுக்கு இவர்கள் மகளாகிய குந்தவையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பராந்தகன்பின், அவன் பெரியப்பன் கண்டராதித்தன் மகனாகிய மதுராந்தகன் அரசுபுரிந்து வந்தான். | பராந்தகன் முதல் மகனாகிய இரண்டாம் ஆதித்தன், சிறுபையனாயிருக்கையிலேயே, வீரபாண்டியன் முடித்தலைபைக்கொய்து பந்தாக உருட்டி விளையாடினானாம். மதுராந்த கனுக்குக் கண்டராதித்தன் என்றொரு மகனிருந்தான். இவர் தான் திருவிசைப்பாப் பாடினோரிலொருவரான கண்டராதித்தர். ஆறாம் அதிகாரம். மது பாந்தகன் அரசுபுரியுங் காலத்திலேயே முதலிராஜராஜன் இளவரசப்பட்டஞ் சூட்டப்பட்டான. இவன் பட்டம் பெறும் விஷ யத்தில் சில இடையூறுகளிருந்தனபோற் றோன்றுகிறது. இவ்வாசன் தன் பிரஜைகளால் தானே அரசனாகவேண்டுமென்று வருந்திக் கேட்கப்

  • செந்தமிழ். தொகுதி-3, பக்கம் -195.

இவ்வரசன் தாய் செம்பியன்மாதேவியார். ஆவள் மழவநாட்டு சிற்ற ரசன் மகள். இவளை, சாஸனங்கள் அடிக்கடி மதுராந்தக தேவரான பரீஉத்தம சோழதேவரை திருவயிறுவாய்க்கவுடைய பிராட்டியார் பிராந்தகன் மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன் மாதேவியார்.'; 'ஸ்ரீகண்டராதித்ததேவர் நம்பிராட்டியார் பிராந்தகன் மாதேவடிகள் பிராட்டியார் செம்பியன் மாதேவியார் மகனான மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழ தேவரைத் திருவயிறுவாய்க்க உடைய பிராட்டியார்" என்று வர்ணிக்கின்றன. இச்சாஸனக் கூறுகளால் மதுராந்தகனுக்கு உத்தமசோழன் என்னும் மறுபெயரிருந்ததென்பது விளங்கும். இவன் ஓர் பரகேசரி, | S. I. I, Vol. I.