உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பட்டும், தன் சிற்றப்பன் மவராந்தகன் சோழராச்சியத்தில் வைத்திருக் கும் வாஞ்சை தீருமளவும் தான் முடிசூடுவதேயில்லையென்று மறுத்து விட்டான். பிறகு இவ்வரசன் கி. பி. !1855-ல் பட்டாபிஷேகஞ் செய்யப் பெற்றான்.. சிறிது காலமாகப் பராதீனப்பட்டுக்கிடந்த சோழராச்சியத்தை க்ஷணதசையினின்றும் வெகு உன்னத ஸ்திதிக்குக்கொணர்ந்து மறு படியும் ஸ்திரயாக ஸ்தாபித்தவன் இவ்விராஜகேசரி-இராஜராஜனே. பட்டத்துக்குவந்து உத்தேசம் பத்து வருஷகாலமாய்த் தன்னாட்டைப் பலப்படுத்திக்கொண்டு, தகுந்த சேனைகள் முதலியவற்றையும் சேக ரித்து வைத்து, புறநாட்டரசர்களை வெல்லக்கருதி வெளிக்கிளம்பினான். இவன் ஆட்சியின் 10 முதல் 1 2 -->து வருஷம் வரை, காந்தளூர் எனும் துறைமுகத்தின்கண் ணுள்ள கப்பல்களை அழித்து, சேரரைச்சயித்து, அவர்களைத் தன்கீழ்ச் சிற்றரசர்களாக்கித் திரும்பினான். இக்காலத்திற் மூன், மது ரையாண் வெந்த அபாபுஜங்க னென்னும் பாண்டியனும், இராஜராஜனால் வெல்லப்பட்டு, அவனுக்குக் கீழ்ப்படிந்தவனாயினன். பின்பு, 12முதல் 14வது வருஷம்வரை இவ்வரசன் கைக்கொண்ட நாடுகள் கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கைநாடு, குடகு முதலியன. இவற்றுள் கங்கபாடி யென்பது இப்போதை மைசூர்ஜில்லாவின் கீழ்ப்பாகமுழுவதும், அவ்விடத்தைச்சுற்றிய சில நாடுகளுமுடைத்தாய், காவிரிக்கரையிலுள்ள தழைக்காடு என்னுநகரத்தை ராஜதானியாகக் கொண்டிருந்த நாடு. இக்கங்கபாடியை முற்றிப்பிடித்ததும், இராஜ ராஜன் தன் பெயரால் தழைக்காட்டுக்கு இராஜராஜபுரமென்று பெயர் கொடுத்தான். அவ்வூர்ச் சாஸனங்களில், அது தழைக்காடாகிய இராஜராஜபுரமென்றே குறிக்கப்பட்டிருக்கிறது. கங்கபாடி கொண்ட பிறகு தழைக்காட்டுக் கருகிலுள்ள கலியூரில் ஒரு பெருத்த யுத்தம் நடந்தது. அதில் இராஜராஜனுடைய சேனாதிபதிகளுள் ஒருவனாகிய கொத்தமண்டலமுடையானான அப்பிரமேயனென்பான், போசளராஜன் • Tiruvalangadu Plates of Rajendracholadeva, Ep. An Repfor 1905-6, p. 68. | Ibid.