பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். மந்திரியாகிய நாகண்ணனைத்தோற்கடித்து, போசள வீரர்களாகிய மஞ்ச கன், காலிகன், நாசுவர்மன் என்பவர்களைக்கொன்று தானுமிச்சண்டை யிலிறந்தான்.* கலியூர்ப்போர் நடந்தது கி. பி. 1006. இராஜராஜன் சோர் மீது படையெடுத்துச் சென்றபோது இவ்வப்பிரமேயனும் தளகர்த்தனாகப் போய், உடனிருந்து யுத்தஞ் செய்தவன். வேங்கைநாடென்பது இப்பொழுது கோதாவரி, கிருஷ்ணா ஜில் லாக்களாயிருக்கும் நாடு. இது கி. பி. 972-முதல் 989-வரை உட் கலகங்களால் அரசர்களில்லாமல் அல்லலுற்றிருந்தது. அச்சமயம் பார்த்து, இராஜராஜன், தன் மகன் இராஜேந்திரன் வசம் ஒரு சேனையை ஒப்புவித்து, அதனைச்சயித்துவா வினான். இராஜேந்திரன் அதனை வென்றதோடு, சாளுக்கிய வம்சத்தானான விமலாதித்தனைப் பிடித்துக் கொண்டு தஞ்சாவூருக்குத் திரும்பினான். விமலாதித்தன் தஞ்சாவூரில் 23-வருஷமிருந்து, இராஜராஜனால் அபிமானிக்கப்பட்டு, அவன் மகள் குந்தவையை மணந்து தன்னாமே ரிக்கப்பெற்றுத் திரும்பிச்சென்று 7-வருஷம் அரசாண்டான். வேங்கைநாட்டுக்கு வடக்சேயுள்ளது கலிங்கம். இதுவும் இராஜ ராஜன் ராச்சியவருஷம் 16-வதில், இவன் வசமாயிற்று. நுளம்பர் என்பவர்கள் பல்லவ வம்சத்து ஒரு கிளையைச்சேர்ந்தவர்கள். இவர்கள் நாடு கங்கபாடியை அடுத்திருந்தது. இராஜராஜன் ஜயித்தகாலத்து அதனை யாண்டவன் அய்யப்ப நுளம்பன. குடகுநாட்டின் பேரில் தண்டெடுத்துச் சென்றபோது, பஞ்சவமா ராயன் என்னும் தண்ட நாயகன், பனசோகே யென்னுமிடத்தில் நடந்த யுத்தத்தே வெகு தைரியமாய்ச் சண்டைசெய்ததைக்கண்டு சந்தோஷ மடைந்து, இராஜராஜன், அவனை வேங்கை மண்டலம் கங்கமண்டல மிவ்விரண்டுக்கும் தண்டநாயகனாக்கி, க்ஷத்திரியசிகாமணி கொங்காள் வான் என்னும் பட்டமும் கொடுத்து, மாலவ்வி என்னும் ஊரையுமனி த்தான். அக்காலத்து மலைநாட்டிலுள்ள கொல்லமும் இராஜராஜனாற் கொள்ளப்பட்டது. Ep. Cara, Mysore District, Vol. I, Tiramakudlu Taluk, No. 44.