பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். கா இவன் சைவமதத்தில் மிக்க ஈடுபட்டவனாயினும், பிறசமயங்களிற் கொஞ்சமேனும் வெறுப்புடையவனல்லன் என்பது இவன் காலத்துப் பல பௌத்த விஹாரங்களுக்கும் ஜைனப் பள்ளிகளுக்கும், விஷ்ணு கிரகங்களுக்கும் இவனால் வைக்கப்பட்ட பல திருநந்தாவிளக்குகளால் வெளிப்படும். நாகபட்டணத்து, கடாரத்தரசனான சூளாமணிவன் மனால் கட்டத்தொடங்கி, அவன் மகன் மாறவிஜயாத்துங்கனால் முடிக்கப்பெற்ற பௌத்த விஹாரத்துக்கு இராஜராஜப் பெரும்பள்ளி என்று தன் பெயரிடச் சம்மதித்தான். இதுவுமன்றி இவன் அதற்கு ஆனைமங்கலமென்றோர் கிராமமும் அளித்தான். இவ்வரசன் சாஸனங் கள் சிற்றாமூர்க் காட்டாம்பள்ளியிலும், திருநறுங்குன்றை நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளியிலும் இன்றைக்கும் காணலாம். பௌத் தப்படிமங்கள் இராஜராஜேசுவரத்தில் சிற்சிலவிடங்களில் வெட்டப் பட்டிருக்கின்றன. இவ்வரசன் காலத்திருந்த மிகப் பெருமையுடைய சேனாதிபதி யான ஸ்ரீகிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழப் பிரம்ம மாராயன் என்பவன், இராஜராஜனுக்கு முக்கிய மந்திரியாயிருந்தான். இராஜராஜனால் குடிகட்குச் செய்யப்பட்ட நன்மைகள் பலவா யினும், முக்கியமானது, தன்னிசாச்சியத்திலுள்ள பூமி முழுதுமளப் பித்து, ஆறிலொரு கடமை வாங்க வற்பாடு செய்தது தான். இவன் காலத்து இராச்சிய விவகாரங்கள் எவ்வாறு நடத்தப்பட்டதென்பது “இராஜாங்க ஏற்பாடுகள்' என்னும் கடைசி அதிகாரத்தினடியில் தூல மாக வரையப்படும். வழாம் அதிகாரம் இராஜாஜனுக்குப்பின் பட்டம் தரித்தவன், அவன் மகனாகிய பாகேசரி இராஜேந்திரசோழத்தவன். இவன் “பூர்வதேசமும், கங் கையும் கடாரமுங்கொண்ட இராஜேந்தி/சோழதேவன்" என்று குறிக் கப்படுவான். இவ்வாசனுக்கு மதுபாந்தகன, உத்தமசோழன், விக்கி ரமசோழன, பண்டிதசோழன், முடி கொண்டசோழன் எனனும் பல நாமதேயங்களுமுள. இவன் கி. பி. 1012-ல் முடிசூட்டப்பட்டான். • Thc large Loidcu grant.