பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம், அதுமுதல், தன் தகப்பனைப்போல, பல இராஜ்யங்களும் ஜயிக்க முயன்று, முதன் முதல், இப்பொழுது மைசூரிலாகாவைச்சேர்ந்த இடைதுறை நாட்டையும், வனவாசியையும்; கொள்ளிப்பாக்கையையும் மண்ணைக்கடக்கத்தையும், ஈழமண்டலத்தையும் கைப்பற்றினான். அரசுரிமைபூண்ட ஐந்தாறு வருடங்களிலெல்லாம் மலைநாட்டைப் பிடித்துக்கொண்டான். பிறகு இரட்டபாடிக்கு அதிபதியாகிய மேனா ட்டுச் சாளுக்கியனாகிய இரண்டாம் ஜயசிங்கனை உச்சங்கிதுர்க்கத்தில் தாக்கி; அவனாடாகிய இரட்டபாடிபை வசப்படுத்திக் கொண்டானென்று சோழசரித்திரங் கூறுகின்றது. ஆயின், குந்தளர்கள் சாஸனங்களில் ஜயசிங்கன் சோழவாசனை வென்றதாகக் கூறியிருக்கிறது. ஆதலால், உண்மையில், இராஜேந்திரன் இரட்ட ராச்சியத்தைத் தாக்கியிருக்கலாமே யன்றி முற்றப் பற்றின வனல்லன். நாளடைவிலேயே ஓட்டாதேசமும், கோசலைநாடும், இலாடதேசமும், வங்காளமும் இராஜேந்திரனால் வெல் லப்பட்டன. இந்நாடுகளின் அரசர்களிற் சிலாகிய இந்தியரதன், கோவிந்தசந்திரன், இரணசூரன், மபோலன் என்பவர்கள் தன் கீழ்ப் படிந்ததாயும், இவர்களுள் மகிபாலன் தலையில் கங்கா தீர்த்தம் நிரப்பிய குடமொன்றேற்றித் தன் இராஜதானிக்குக் கொண்டுவரும்படி இராஜேர் திரன் செய்தானென்றும் இவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. அதற்குப் பிறகு “ அலைகடல் நடுவிற் பலகலஞ் செலுத்தி” “மாநக்கவாரத்” | தீவு களைக் கைப்பற்றிக்கொண்டு பின் கடாரம் நோக்கிச் சென்று அத்தேசத் தின் கடற்றுறையாகிய மாப்பபாளத்திலிறங்க, அதை அரசாண்டு கொண்டிருந்த சங்கிராம விஜயோத்துங்கவர்மனை ஜயித்தான். சங்கி பரம விஜயோத்துங்கவர்மன் மாற பிஜயோத்துங்கன மகனும், சூடாமணி வர்மன் பெயரனுமாகவேண்டும். பண்டிதசோழன் என்று இவ்வரசனுக்குப் பெயரிருத்தலின், இவன் மிக்ககல்விமான்போற் றோன்றுகின்றது. இவன்காலத்தும், ------...- ----- --- ------------------- --------..............-----

  • இவ்வரசன் தன் தங்கை குந்தவ்வையின் கணவனாகிய விமலாதித்தனை ஜயித்து, அவன் நாட்டிலுள்ள மஹேந்திர பர்வதத்தில் ஜா ஜயஸ்தமபம் நாட்டினான் என்று மஹேந்திர பர்வதத்தின் மேலிருக்கும் கோகர்ணசுவாமி கோயிலின் தமிழ்ச் சாஸ்னம் ஒன்று தெரிவிக்கிறது. இச்சாஸனத்தின்கீழ் ஒரு புலியும், இரண்டு கயல்மீன்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

க்ெகோபார்த்தீவகள் , பர்மாதேசம்.