உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இவன் தந்தைகாலத்துப்போல் கௌட முதலிய பல தேசங்களினின்றும் பிரபலபிராமணர்கள் வரவழைத்து ஆதரிக்கப் பட்டார்கள். இவன் மிக்க ஈகையும் பக்தியுமுடையவன். இவன், தன் காரணப்பெயராகிய கங்கைகொண்ட சோழன் என்னும் நாமதேயத்தால், கங்கைகொண்ட சோழபுரமென்று ஒரு நகரங்கட்டி, அதில் கங்கைகொண்ட சோழீசுவர மென்னும் ஓர் சிறந்த ஆலபமுமாக்கினான். இக்கங்கைகொண்ட சோழ புரம் பிற்காலத்துப் பல சோழ அரசர்களால் இராஜதானியாக்கிக் கொள்ளப்பட்டது. இவ்வூருக்கு ஸ்ரீ வைஷ்ணவாசாரியர்களுள் முதல் வராகிய ஸ்ரீமந் நாதமுனிகள் அடிக்கடி போய்க்கொண்டிருந்து கடைசியில் இவ்வூரிலேயே காலமும்சென்றார் என்று குருபரம்பரைகள் தெரிவிக் கின்றன. இவ்வரசன் கட்டிய கங்கைகொண்ட சோளீசுவாமே கருவூர்த் தேவரால் தம் திருவிசைப்பாவில் பாடப்பட்டது. எட்டாம் அதிகாரம். இராஜேந்திரசோழன் காலத்திற்குப்பின், ராஜகேசரி இராஜாதி ராஜன் சிம்மாசனம் ஏறினான். இவனே கலிங்கத்துப் பாணியில் "கம்பிலிச்சயத்தம்புநட்டதும்" என்று புகழப்பட்டவன். முற்கூறி யாடி இராஜேந்திரசோழதேவன் கி. பி. 1012-ல் பட்டந்தரித்து கி பி. 1032-வரையாண்டான். ஆயின் மிண்டிங்கல் என்னு பீடத்திலுள்ள ஒருசாஸனம், இராஜாதிராஜன் கி. பி. 1113-ல் பட்டாபிஷேகஞ் செய்யப்பெற்றானென்கிறது. ஆகலால், இவன் இராஜேந்திரசோழ தேவனுடைய 7-வது இராச்சியவருஷத்தில், ராஜாங்ககாரியங்களை நிர்வஹித்துவத் தலைப்பட்டானென்று தோன்றுகின்றது. இவ்வரசன் காலத்துச் சாலனங்களெல்லாம் இவனுடைய 26-வது இராச்சியவருஷ முதல் 32-வது வரையில் காணப்படுகிறன. இவனுடைய 26-வது வருஷர்தான் இராஜேந்திரசோ மூதேவனிறந்தது. ஆதலால் பாஜேந்திர சோழதேவன்பின் இவன் 6- வருஷம் அரசாண்டான். இவ்வரசன், தன்

  • பின்பழகிய ஜீயர் குருபாம்பராபிரபாவம், 1 "அன்னமாய்” என்றாரம்பிக்கும் பதிகம். 1 இராச பாரம்பரியம் -பா 26.