பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். குலோத்துங்கன் சிறந்த அரசனாயிருந்தது மன்றிச் சிறந்த கல்வி மான். கற்றோர்க்கு உதாரன். இவன் காலத்திற்றான், இவறுடைய வேண்டுகோளின்மேல், சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். இவன் காலத்திலேதான், விசிஷ்டாத்துவைதமத ஸ்தாபகரான ஸ்ரீராமாநுஜா சாரிய ரிருந்தார். ஆயின், இவ்வரசன், அவ்வாசாரியரிடத்து, ஒருசிறு தவறுதலால், அபசாரப்பட நேர்ந்தது. இவன் தனக்குத் தீங்கு செய்வானென்னும் பயத்தால் ஸ்ரீராமாநுஜாசாரியர், போசளராச்சியத் தில், தொண்டனூரிலே ஓடி ஒளிக்கவேண்டியதாயிற்று. இவ்வாசாரியர்விஷயத்தில்மாத்திரம் இவன் கொடியவனாயிருந் தானேயன்றி, மற்ற மதஸ்தர்களை இவன் ஒ நவிதத்தும் உபத்திரவஞ் செய்தவனல்லன். குலோத்துங்கன் சுத்த சைவனாயினும் மற்றைய மதங்களையும் நன்கு மதித்துவந்தான். வைஷ்ணவ, சைவ, ஜைன, பௌத்தக் கோயில்கடோறும் இவன் சாஸனங்களைக் காணலாம். நாக பட்டினத்துப் பிரபலமான இராஜராஜப் பெரும்பள்ளிக்கும் இவ்வர சன நில முதலியன தானஞ்செய்திருக்கின்றான.. மன்னார்குடி ராஜ கோபாலஸ்வாமி கோயில் இவன் பெயாற் கட்டப்பட்டது. இதற்குக் குலோத்துங்கவிண்ணகரம் என்பது பழம்பெயர். இவனுக்குத் திருநீற் றுச்சோழனென்னும் பெயருண்டு என்பது, இவன் முன்னலூர் என்னும் கிராமத்தின் பழம்பெயரை நீக்கித் திருநீற்றுச்சோழநல்லூர் எனத் தன் பெயரால் திரிசூலத்து தர்மபுரீசுவரர்க்குக் கொடுத்தானென்பத னால் விளங்கும். குலோத்துங்கன் 19-வருஷம சாண்டான். அஃதாவது கி. பி. 1070-1118: 9 ஆகிறது. தானிறத்தற்கு 3-வருஷங்களுக்கு முன்ன தாகவே, ராஜ்யகாரியங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் தனக்கு உதவியாயிருக்கவும் 12 த்தேசித்து, விக்கிரமசோழத்துக்கு இளவரசுப் பட்டங்கட்டினான்.

  • The small .Leillen (Frunt. t Ep. An. Thopp. for 1901-2 No. 312 of 1901.