________________
திருச்சிற்றம்பலம். முகவுரை. உலகத்து, நாகரீகம் வாய்ந்த தேசத்தாரது கொள்கைகளிலே, தம் பூர்வசரித்திரங்களில் அபிமானம்வைத்து அவற்றைப் போற்றிக் கொள்ளுதலும் ஒன்றாகவுள்ளது. கல்வி, வீரம், அரசியல், கொடை முதலிய சிறந்த குணங்களுடன் தம் முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்தவழிகளைப் பின்னவர்க்கு கினைப்பூட்டி அவர்களை ஊக்கி நல்வழிப் படுத்து குப் பழைய சரிதங்கள், உற்ற துணையாகின்றன. அதிலும், மாணவரது உற்சாகத்திற்கு இவை பெரிதும் வேண்டற்பாலனவாம். சரித்திர சம்பந்தமான விஷயங்கள் மேனாடுகளில் எவ்வளவு அவாவுடன் படிக்கப்பட்டு வருகின்றன என்பதற்குப் பலவாறக அந்நாடுகளில் நூல்கள் வெளியாக்கப்பட்டு வருதலே தக்க சான்றாகும். ஆனால், நம் நாட்டை ஆட்சி புரிந்த பழையவரசர்களிற் பலர் அறிவாண்மை பெருமை களில் இணையற்றவராக விளக்கினும், அவர்களது அருமை பெருமை களை உள்ளவாறே நாம் அறிந்து மகிழ்தற்கு அதிகவிடமில்லாமலிருப்பது பெரிதும் வியசனிக்கத்தக்கது. தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில், சோசோழ பாண்டியர் எத்துணைப் பழமை பெருமை கொண்டவரசர்கள்? இராமாயண பாரதாதி வடநூல்களிலும் அன்னேர் புகழப்பட்டிருக் கிவறனபெனின , அவரது பெருமைக்கு வேறுசான்றும் வேண்டுமோ? ஆயினும், அவரது வரலாறுகளாக நாம் தெரிந்து கொண்டவையோ அதிகமில்லையாகும். தமிழ்நாட்டைப் பல்லாயிரவாண்டுகள் கீர்த்தி யுடன் ஆட்சிபுரிந்த இவ்வாசரது உண்மை வரலாறுகளை நாமும நம்மாணவரும் அறிந்து கொள்ளக் கூடுமாயின், அது நம்மவர்க்குப் பிற சரிதங்களாற் பிறக்கு மின்பத்திலும் பதின்மடங்கு மகிழ்ச்சி விளைக்கத் தடையென்னை? இவ்வாறு, (நம்பூர்வசரிதங்கள் நமக்குத் தெரியவராமைக்கு நம்மவரது ஊக்கமு முழைப்புமின்மையே முக்கிய ஏது என்று சொல்லத் தடையில்லை. சரித்திர மெழுதப்படுவதற்கு ஏற்ற சாதனங்கள் நாட்டிற்கிடைப்பதரிது என்று அடிக்கடி சொல்லப் படுவதுண்டு. இதில் ஒருபாக முண்மையுமுண்டேனும், நாட்டின் மறைந்து கிடக்கும் எத்தனையோ கருவிகள் வெளிவராமைக்கு மம்மவாது வாக்கக் குறைவையே முக்கியகாரணமாகச் சொல்லல் தரும்.