________________
முகவுரை இது பற்றியே உள்ள விஷயங்களும் வெளிவந்து பிரகாசிக்க இடமில்லா மற் போயிற்று, இங்ஙனம், நாகரீகம் பெற்ற ஒருநாட்டார் தம் பூர்வசரித் திரத்தைத் தவறவிடுவது, அவர், தமது பெருமையை இழந்ததாக முடியுமேயன்றிப் பிறிதன்று. இவற்றைநோக்கித் தமிழறிஞர் சிலர், பெருங் கவலைகொண்டு உழைத்துளராயினும், நம்மிற்பலர்க்கு அதன் அருமை இன்னுந் தெரிந்ததில்லையெனலாம்.) ஆனால், நம் அரசாங் கத்தார், பழைய சரித்திரங்களைப் போற்றிவைத்தற்குச் செய்திருக்கும் சிறந்த முறைகளே, மேற்கூறிய குறைகளை இப்போது ஒருவாறு நீக்கி வருகின்றன. இதன்பொருட்டு அரசாங்கத்தார்க்கு நம்மவர் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையராவர். (மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பெற்ற காலத்தே, தமிழ்நாடு சம்பந்தப்பட்ட உண்மைச்சரிதங்களை நம்மவர் நன்கறியும்படி செய்வது, சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக்கருதப்பட்டது. அங்ஙனமே அச்சங்கத்துச் “செந்தமிழ்”ப் பத்திரிகையில் அரிய சரித்திர விஷயங்களும், சாஸனங்களும் தக்க அறிஞர்களால் கண்டெழு தப்பட்டு, ஆதிமுதலே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றிற் பல, தமிழ்மக்களது உவப்புக்கும் வியப்புக்கு முரிய வென்பதில் ஐயமில்லை.) இத்தகைய அரிய வியாசங்களைத் தமிழபிமானத்தோடு முக்கியமாக எழுதிவருபவர்களில் - இப்போது திருவனந்தபுர ஸம்ஸ் தானத்துச் சிலாசாஸன பரிசோதக அத்யகூராயுள்ள ஸ்ரீமத்-து. அ. கோபிநாதராயரவர்களு மொருவர். இராயாவர்கள் எழுதியவற்றில் சோழவமிசத்தைப்பற்றி அவர்கள் தொடர்ச்சியாகச் செந்தமிழில் வெளியிட்டுவந்த வியாசம், பற்பல தமிழிலக்கியங்களினின்றும் எண்ணிறந்த சாஸனங்களினிறுைம் பிற பல நூல்களினின்றும் திரட் டிப் பேராராய்ச்சி காட்டி எழுதப்பெற்றதாம். இச்சரித்திரம் பண்டைச் சோழாது வீரம், நியாயம், தியாகம் முதலிய அருங்குணகளையும் அவர்கள் தமிழ்வளர்த்த திறத்தையும் மற்றும்பல வரலாறுகளையும், தக்க ஆதாரங்களுடனும் காலவரையறைகளுடனும் நான்கு விளக்கிச் செல்கின்றது. சோழர் காலத்திருந்த தமிழ்நாட்டினிலைமை இத்தகைத் தென்பது, இதனிடை வெள்ளிடை மலைபோல் விளங்கக் காணலாம்.