பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சO சோழவமிச்சரித்திரச்சுருக்கம். அவைகளை முறியடித்துப் பாண்டி நாட்டைவிட்டு நீங்கும்படி செய்தன. இவ்விஷயங்களைச் சுருக்கமாகக் காஞ்சீபுரத்துக்கடுத்த ஆரப்பாக்கத்துக் கோயிற்சானைமொன்று விவரித்திருக்கிறது. சிங்களப் பதகர் பாண்டி மண்டலத்தைப் பிடித்துக்கொண்டு, குலசேகரனையும் துரத்தி, சோழ அரசன் பிரதிநிதிகளோடுங்கூடப் போர்புரியத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் தொண்டி, பாசி முதலிய விடங்களைப் பிடித்துக்கொண்ட வாறும், சோழநாட்டின் பக்கம்வர எத்தனிப்பதும் நோக்கிச் “சோழியக் குடிகள் பயப்படுகின்றன; அஃது எங்கனையாமோ" என்று விசாரப் பட்டு, சுவாமிதேவர் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட தன்னாசாரியரிடம் எதிரிலிசோழசம்புவராய னென்பவன் சொன்னான். “சிங்களர் சோழ நாட்டிற் புகுந்தார்களென்றால் கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் மிக்கதீங்குநேரிடும்" என்று சுவாமிதேவர் சொல்ல, சம்புவராயன், "ஸ்வாமி! ஏதேனும், ஜபதபங்களைச் செய்து அவர்கள் முகம் நாம் காணாதவாறு தாங்கள் செய்யவொண்ணாதோ" வென்ன, அவர் “சிங்கள வர், இராமேசுவரத்துக் கோயில்வாயிலைப் பெயர்த்து, பூசைத்தட்டுண் டாம்படி செய்து, கோயிலையுங்கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன்; அன்னோர் சிவத்துரோகிகள்; அவர்கள் போரில் தோற்று முறியடிக்கப் பட்டு ஓடிப்போம்படியான மார்க்கம் தேடுகிறேன்" என்று சொல்லி, அகோராத்திரம் இருபத்தெட்டுநாள் தவம்புரியவே, பிள்ளை பல்லவ ராயனிடமிருந்து "ஜகத்ரததண்டநாயகன், லங்காபுரி தண்டநாயகன் முதலிய பலரும் முறியடிக்கப்பட்டு ஓடிப்போய்விட்டார்கள்" என்று ஓலைவர, அதனைக்கொண்டுபோய் எதிரிலிசோழசம்புவராயன் சுவாமி தேவர்க்குக் காண்பிக்கவே, அவரும் மகிழ்ந்தனர். அப்பொழுது அவன் சுவாமிதேவருக்கு ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை நிர்ப் பந்தப்படுத்திக்கொடுத்தா னென்பன முதலிய விஷயங்களையெல்லாம் இச்சாஸனம் கூறி, இறுதியில் சுவாமிதேவர் என்பார் பெயர் உமாபதி தேவராகிய ஞானசிவதேவரென்றும், இவர் கௌட தேசத்துள்ள தக்ஷிண லாடப்பிராமணர் என்றும் தெரிவிக்கின்றது. -

  • Ep An. Rep. for 1898-9. pp-8-11. t Ibid. No. 20 of 1899.