பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமீச்சரித்திரச்சுருக்கம் கன்வசம் ஒரு பெருஞ்சேனை அனுப்பியுதவினான். இலங்காபுரியும் ஜகத்விஜயனுமாகத் திருப்பாலி என்னுமிடத்திற் குலசேகானை முற்ற முறியடித்து, மதுரைக்குச்சென்று, வீரபாண்டியனை மறுபடியும் சிம்மாசனத்து இருத்தினார்கள். பின்பு இலங்காபுரி, குறும்பராய னென்னும் ஒருவனைத் தோற்கடித்து, திருப்புத்தூரைப்பிடித்துக் கொண்டு, பொன்னமராவதி என்னுமிடத்திருந்த மூன்று மாளிகை யுடைய அரண்மனை முதலிய பலகட்டிடங்களை இடித்து மதுரைக்குத் திரும்பினான். இவ்வளவெல்லாம் முடிந்ததும், பாக்கிரமபாஹுவிடமிருந்து, வீரபாண்டியனுக்கு முடிசூட்டுமகோற்சவம் நடத்தவேண்டுமென்று இலங்காபுரிக்கு ஆணைவா, அதன்படியே மகுடாபிஷேகமும் நடத்தப் குலசேகரன் பின்னுமொருகால் இலங்காபுரியுடன் ஸ்ரீவில்லிபுத் தூரில் எதிர்த்துப் பெரும்போர்புரிந்து, அதிலும் தோல்வியடைந்து, சாந்தனேரியிற்போய்த் தங்கியிருந்தான். அதனைக்கேள்வியுற்று இலங் காபுரி அவ்வூரின்மேற் படையெடுத்துச் சென்றான். இலங்காபுரி தன்னுடன் யுத்தத்துக்கு வருகின்றான் என்ற செய்திகேட்டு வெள்ளத் தில் அவன்மடியக்கடவனென்று குலசேகரன் அங்குள்ள பெரியாரி யொன்றன்கடையை பிடித்துவிட்டவன். இந்தயுக்தியும் நிறைவேற வில்லை. பிறகு குலசேகான் பாளையங்கோட்டைக்குப் போய் அவ்விடத் துப் பாசறையிலிருந்து கொண்டு, சோழனைத்துணைவேண்டினான். இரா ஜாதிராஜன் உடனே பலசைந்தியங்களை அனுப்பி உதவினன். இப்படை களைச் செலுத்தியவரில் நரசிங்கபத்மராயன், பல்லவராயனென இருவர் இருந்தனர். சிங்களவர் நற்காலம் இதனுடன் தொலைந்தது. பாண்டிய சோழ கொங்கு சேனைகள் ஒருங்குகூடி, பாண்டியாரச்சியத்தில் பற்பல கோயில்களையிடித்தும், இன்னும் அநேகவித அகியாயங்களைச் செய்தும் வர்த சிங்களப்படைகளைத் திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்ன மராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி என்னுமிடங்களில் எதிர்த்து