பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். றுண்டுபோன சிலவற்றையும், தன்னுடைய சேனையையும் ஒருங்கு சேர்த்துத் தானே யுத்தத்திக்குப் புறப்பட்டான். வெகு பெருத்த போர்கள் நடக்க முடிவிற் குலசேகரன் அபஜயப்பட்டான். சிங்களவர் பலவிடங்களைப் பிடித்துக்கொண்டு அவைகளைப் பலப்படுத்திவந்தனர். இவை இப்படி இருக்க. கொலையுண்ட பாக்கிரமன்கடைசிமகனாகிய வீரபாண்டியன், குல சேகாரன்கையிலகப்படாமல் தப்பி, மலையாளத்திற்கு ஓடி ஒளித்தான் என்பதை இலங்காபுரியறிந்து, அவனை மதுரைக்குத் திரும்பிவந்து இராச்சியத்தைப் பெற்றுக்கொள்ளப் பணித்தான். அவனும் இலங்கா புரியின் தைரியத்தால் தன்னாட்டுக்குத் திரும்பி, பராக்கிரம பாஹுவா லனுப்பப்பட்ட பரிசுகள் பலவற்றுடன் பாண்டி நாட்டையும் பெற்று இலங்காபுரியுடனிருந்து ஆண்டுவந்தான். இதற்குள், இலங்காபுரி கீழைமங்கலம் மேலைமங்கலமுதவிய இடங் களைப்பற்றிக்கொண்டு, கண்டதேவமழவராயனென்பவன் அவ்விடங்களை யாளும்படி நியமித்துச்சென்றான். பிறகு மானவீரமதுரை முதலிய பலவிடங்களும் சிங்களவர் கைப்பட்டன. பாதபதம் என்னுமிடத்தில் நடந்த யுத்தத்திலே குலசேகரன் படைத்தலைவனும் மிக்க நண்பனு மாகிய தென்னவப்பல்லவராயன் என்பவ னிறந்தான். தொண்டி, கருந் தங்குடி, திருவேகம்பம் என்னுமூர்களும் சிங்களவர தாயின. இவ்விடங் களையெல்லாம் இலங்காபுரி, மாளவச்சக்கரவர்த்தியென்பானொ நவனிடம் ஒப்புவித்து அவைகளையாளும்படி ஏளித் திரும்பினான். சிங்களர் மேன்மேலும் ஜயமடைவதும், பாண்டியர் ஒரேபடியாகத் தோல்வியடைவதும் நோக்கிப் பொறாதகுலசேகான் மறுபடியும் கொங்கு நாட்டுப் படைகளையும், தன் மறவர் படையையும் தைரியப்படுத்திச் சேர்த்துக்கொண்டு ஆயத்தமாகையில், சிங்களவரால் ஆங்காங்கு நாடாள நியமிக்கப்பட்ட தமிழ்ச்சிற்றரசர்கள், சொல்லாமலே குலசேகானுடன் சேர்ந்துவிட்டனர். தன்னெண்ணங்களெல்லாம் பழுதாகப்போனதைக் கண்ணுற்று, இலங்காபுரி, உடனே தன்னரசனாகிய பராக்கிரமபா ஹுவை, மற்றும் சில சைர்யங்களனுப்பவேண்டும்' என்று எழுதிக் கெட்டுக்கொண்டான். அவனும், ஜகத்விஜயன் என்னும் தண்டாய