உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இவன்மகன் இரண்டாம் இராஜராஜனையும் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவ்விருவருமே 'குலோத்துங்கசோழன் உலா" 'இராஜராஜன் உலா' என்னும் உலாக்கட்கு நாயகர்கள். இவ்வுலாக்கள் கொண்டதையொழிய இவர்கள் செயல்கள் ஒன்றும் தெரியவில்லை. இரண்டாம் இராஜராஜனுக்குப் பிந்தியும் மூன்றாங்குலோத்துங்க னுக்கு முந்தியும் இராஜகேசரி இராஜாதிராஜனன்ற பெயருடன் (II) ஓர் அரசனிருந்தான். இவன் முன்பின் னவர்களுக்கு என்ன உறவு முறையானென்பது தெரிந்திலது. இராஜாதிராஜன் காலத்தே, பாண்டியராஜ்யத்தின் அரசாட்சி யைப்பற்றிப் பாக்கிரமபாண்டியனுக்கும், குலசேகரபாண்டியனுக்கும் விவாதட நேர்ந்தது. பாக்கிரமபாண்டியன் சிங்களத்தரசனாகிய பராக் கிரமபாகுவைத் துணைவேண்டினான். அவன் தன் தண்டநாயகனான இலங்காபுரியை ஒரு பலத்த சைந்யத்துடன் அனுப்பினன். இலங்கா புரி வந்து சேருமுன், குலசேகரனால் முற்றப்பட்டிருந்த பராக்கிரமன், பெண்டு பிள்ளைகளோடும் கொல்லப்பட்டான். இவ்வாறு, பிரமாதம் நேர்ந்ததென்று கேள்வியுற்று, இலங்காபுரி தண்டநாயகன், பாண்டி நாட்டைஜயித்து அதனைக் கொலையுண்டபராக்கிரமன் உறவினர் யாருக் காவது கொடுப்பதென்று துணிந்து, முதன் முதல் இராமேசுவரத்தைப் பிடித்துக்கொண்டு அதன் கோயிலையும் அழித்தான். பிறகு குந்து காலம் என்னுமிடம் அவன் வசமாயிற்று. அதில் ஓர் கோட்டை கட்டி அதற்குப் பராக்கிரமபுரமென்று தன் எஜமானன் பெயரிட்டான். இவ்வாறு சிறிது சிறிதாகப் பாண்டி நாட்டைக் கைப்பற்றிவரும் இலங்கா புரியைத்தாக்கவேண்டி-.சுந்தரபாண்டியன் பாண்டியராஜனென்றிரு வரைக் குலசேகரன் அனுப்பினான். ஆனால் அவ்விருவரும் இலங்காபுரி யால் தோல்வியடைந்தார்கள். இதன்பிறகும் பற்பலவிடங்களில் யுத்தம் நடக்க, சிங்களவரே வெற்றியடைந்து வந்தனர். இப்போர்கள் ஒன்றில் பாண்டிய தளகர்த்தனாகிய ஆளவந்தான் என்பவனொருவன் மடித்தான். இவையெல்லாம் பார்த்துக் குலசேகரன், கொங்குராட்டினின்று தன் மாமன் சேவைகளையும், பராக்கிரமபாண்டியன் சேனைகளிற் சித