________________
சோழவமிசசரித்திரச்சுருக்கம். அழிந்து, அனந்தரப்பட்டு இவ்வூரிறை இறுக்கைக் குடலில்லாமை யால் இவ்வூர் நீர் நிலம் விற்றாகிலும் ...” என்று திருவோத்தூர்ச்சாஸன மொன்றிலும், * “நம்மூர், யாண்டு ஆறாவது, கடமைத்தட்டுண்டாய் இத்தட்டுக்கும் பழதாய் பாங்கிலத்திலே சிறிது விற்றலும் கடமைத் தட்டுப் போக்கறுக்கவேணுமென்று மகாசபையோம் ஸம்மதித்து ..." t என்று திருவதிசாஸனம் ஒன்றிலும் கூறியிருப்பதால், வடக்கே திருவோத்தூர் முதல் தெற்கே கஞ்சாவூர் வரையாயினும் இந்த வற்கடம் குடிகளை வருத்தியிருக்கவேண்டும். தவி) இப்பஞ்சம் அதி விருஷ்டியால்நேர்ந்ததென்றுந் தோற்றுகின்றது. விக்கிரமசோழன் இளம்பிராயத்திலேயே வடக்கே வேங்கைநாட்டை யாளும்போது தெலுங்கவீமன் என்னு மாசனொருவனைப் போரிலை ஜயித்தான். இந்தச்சொழசக்காவர்த்திக்குத் தியாகசமுத்திரம் அக ளங்கன் என்ற இருமறுபெயர்களுண்டு, இவனுக்கு மனைவியரிருவர்; இவருள் முதலவளாகிய முக்கோக்கிழானடி என்பாள் இவன் பட்டக் தரித்தபின் ஒன்பது வருஷகாலம்வரையிலும் பட்டத்தரசியாயிருந்து இறந்தாள். இவளுக்குப்பின் இரண்டாமவளாகிய திரிபுவனமுழுதுடை யாள் பட்டமகிஷியானாள். பிறகு அரசன் தரணிமுழுதுடையாள் என்னும் மற்றொரு மனைவியை மணந்தான். இவன் வைஷ்ணவமதத்தில் அபிமானமுடையான் என்று ஸ்ரீ வைஷ்ணவ கிரந்தங்கள் கூறுகின்றன. இவன் ஸ்ரீரங்கத்தில் தன் பெயரால் இரண்டு திருவீதிகள் கட்டிவைத்தான். அவற்றுக்கு அக ளங்கன் திருவீதி, திருவிக்கிரமன் திருவீதி யென்பது பெயர். பதின்மூன்றாம் அதிகாரம். விக்கிரமசோழன் மகனும் அவன்பின் முடி சூடியவனுமாகிய இரண்டங்குலோத்துங்கன் குலோத்துங்கசோழன் கோவை'யிலும் உலாக்களிலும் குமார குலோத்துங்கவெனப்படுகிறான். இவனையும் • Ibid for 1899-1900. No. 87 of 1900. | bid for 1902-8, No:130 of 1908. கோயிலொழுகு ,