________________
சோழவமிச்சரித்திரச்சுருக்கம். வீரநாரசிம்மன் “மகராஜ்ய நிர்மூலம்" செய்ததாலும், சோளராஜ்ய ஸ்தாபனாசாரியன்" என்னும் பட்டம்பெறுவதாலும், இவன் பாண்டியர்க ளிடமிருந்து சோணாடு திரும்ப வாங்கிக் கொடுத்தது கி. பி. 12221224-க்குள்ளாகலாம்.* கன்னிராச்சியத்தை யடைந்து கி. பி. 1232-வரை கவலையின்றி இராஜராஜன் அரசாண்டுவந்தான். இவ்வாறு நிகழுநாளில், மிக்க பலசாலியாகித் தன்புகழை நாளடைவிலேயே நிலை நிறுத்தி வந்த பல்லவ வமிசத்தானாகிய " அவனியாளப்பிறந்தான்" கோப்பெருஞ்சிங்கன் என் பவன் முரணத்தலைப்பட்டான். "திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜ ராஜதேவர்க்கு யாண்டு 15-வதின் எதிராமாண்டு (16-வது) பிரதாப சக்கரவர்த்தியைத் தன் படை யைவிட்டு ராஜ்யத்தை அழித்து, தேவா லயங்களும் விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையாலே, இப்படிதேவன் கேட்டருளி, சோழமண்டல பிரதிஷ்டாசாரியன்" என்னும் கீர்த்தி நிலைநிறுத்தியல்லது இக்காளம் ஊதுவதில்லை என்று, தொரசமுத்திர த்தினின்றும் படை எடுத்துவந்தா, மகாராஜ்ய நிர்மூலமாடி, இவனையும் இவன் பெண்டுபண்டாரமும் கைக்கொண்டு பாச்சூரிலேவிட்டுக் கோப் பெருஞ்சிங்கன் தேசமுமழித்துச் சோடிசக்கரவர்த்தியையும் எழுந்தருளு வித்துக் கொடுவென்று தேவன் திருவுள்ளமாய் எவ, விடைகொண்டு எழுந்த ஸ்ரீ மனுமஹாபிரதானி, பாம விலாஸி, தண்டினகோ பன், ஜகதொப்பகண்டன் அய்யன தண்ணாக்கனும், சமுத்திரகொப்பய தண்ணக்கனும், கோப்பெருஞ்சிங்கனிருந்த கள்ளேரியும், கல்லியூர் மூலை யும், சோழகோனிருந்த தொழுதகையூருமழித்து, வேந்தன் முதலி களில் வீரகங்கநாடாழ்வான், சீனத்தரையன், ஈழத்துப்பராக்கிரமபா ஹள்ளிட்ட முதலி 4-பேரையும் ... கொன்று, இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொள்ளிச் சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு, பொன்னம்பல ேதவனையும் கும்பிட்டு எடுத்துவந்து, தொண்டமானல் லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து அழி... காடும் வெட்டுவித்து, திருப்பாதிரிப்புலியூரிலே விட்டிருந்து, திருவதிகை, திருவக்கரை உள்ளி ட்ட ஊர்களுமழித்து; வாரணவாசி ஆற்றுக்குத்தெற்கு சேந்தமங் கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழிவூர்களும் குடிகால்களும் சுட்டும்,
- Fleet's Dyn. Kan, Dist. p. 507.