பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். வருவத்து 11-வது யாண்டு முதல் சோணாட்டைச் சேர்ந்த திருவை யாறு, * திருமழபாடி, 1 திருவானைக்கா, - ஸ்ரீரங்கம், * திருக்கழுக் குன்றம் முதலிய பலவிடங்களிலும், வடக்கே நெல்லூரிலும் 1| காண ப்படுகிறபடியால், இவன் சோனாட்டை ஜயித்திருத்தல் திண்ணம். அன்றியும், இராஜேந்திரன் சாஸனங்களும் இது காறும் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களைத் தவிர வேறு காணப்படாமையால், இவன் நாடு மிகவும் குறுகிவிட்டது என்பதும் தோன்றும். இவன் காலத்தோடு சோழவமிசப் பிராபல்லியம் ஒழிந்தது. இவன் 22-வரு டங்களுக்குமே லாண்டவன். இவன் பின்னும் சிற்சில சோழர்களிருந்திருக்கிறார்கள். சகவரு ஷம் 1236 (கி. பி. 1314)-ல் வீரசோழன் என்பவன் மகனாகிய வீரசம்பன் என்பவன் ஒருவன் சிற்றரசனாக ஆண்டுவந்தானென்று திருவல்லத்துச் சாஸனம் | ஒ றால் வெளியாகிறது. இச்சக வருஷத் துக்கும் இர- ஜேந்தரனுடைய கடை சிக்காலத்துக்கும் இடையே உத் தேசம் 60-வருஷங்கபோயிருத்தலால் இச்சாஸனத்துக்கூறியிருக்கும் வீரசோழன் இராஜேந்திரனுக்குப் பின் பட்டந்தரித்த சிற்றரசனா யிருக்கலாம். பதினேழாம் அதிகாரம். இராஜாங்க முறைமை. இராச்சியத்தில் அரசனே முதன்மையான பதவியுடையவன். அர சியலைத் தன்னிஷ்டம்போல இவன் நடத்தலாமாயினும், இவன் பலருடன் மந்திராலோசனை செய்தே காரியங்களை நடத்துவது வழக்கமாயிருந்தது.

  • Ey. An. lley), for 1893-4. No. 254 of 1894. t lid for 1894-5. No 90 of 1895. 1 Ep. Ind. Vol. VI p. 307. $ Ep. All. Repy for 18?2. No. 60 of 1892. Sibid for 93-94. No. 186 of 1894. 1 lbid for 1894-95 No. 196 of 1894. || Ep. Ind. Vol. III. pp. 70-71.