உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். குப் புகப்பெறாதானாகவும். தான்எழுதினகணக்குத் தானேகாட்டுவா னாகவும். மற்றுக்கணக்கர் புக்கு ஒடுக்கப்பெறாதார் ஆகவும்." “இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்திராதித்தவல் என்றும் குட வோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்கரவர்த்தி பண்டிதவத் சலன் குஞ்சரமல்லன் சூரசூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரி வர்ம்மர்கை ஸ்ரீமுகமருளிச்செய்து வரக்காட்ட ஸ்ரீ ஆஞ்ஞையால் சோழநாட்டுப் புறங்காம்பைநாட்டு ஸ்ரீவங்கநகர்க்காரஞ்சை கொண்டய கிரமவித்த பட்டனாகிய சோமாசிப் பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நங்கிராமத்துக்கு அப்பியு தயமாக துஷ்டர் கெட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம். உத்தரமேருச்சதுர்வேதி மங்கலத்து சபையோம். இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்க வியவஸ்தை எழுதினேன். மத்தியஸ்தன் காட்டிப்பொத்தன் சிவக்குறி இராஜ மல்லமங்கலப் பிரியனேன்." மேற்கூறியவாறு சபையாரால் தெரிந்தெடுக்கப்பட்டவுடனே அவர் கள் தத்தம் வேலையிலமர்ந்து தமக்கென்றிட்ட காரியத்தைப்பார்ப்பார் கள், ஊாகளில் நியாயம் விசாரித்துத் தீர்ப்பு அளிப்பது சம்வத்ஸர வாரியக்காரர்களைச்சேர்ந்த விஷபம்போலத்தோற்றுகின்றது. இவர்கள் விதிக்கும் தண்டனை சிலவறறைக் கீழே கவனிப்போம். கொலைசெய்த வனுக்குத் தண்டனை அவன் உயிர் வாங்குவதே. ஆயின் தற்செயலாய் ஒருவன் அசாக்கிதையால் நேர்ந்த சாவுக்காக, அவ்வசாக்கிரதைக்குத் தக்கபடி தண்டனை விதிக்கப்பட்டது. ஏழாட்டைப் பிராயத்தான் ஒருபையன் கொடுவாள்கொண்டு மரக்கொம்புகளைத் தறிக்கப்போனவிட த்து அவனுடன் சென்ற ஆறாட்டைப் பிராயத்தான் மற்றொருபையன் கையை நீட்டத் தற்செயலாய்க் கொடுவாள்பட்டு இறந்தான். சபையார் கூடி விசாரித்து, இது தற்செயலே: ஆயினும் இதைப்போல மறுபடியும் நேராவண்ணப், கோயிலில் அரைவிளக்கு எரிக்கச்செல்லும் தொகையைத் தண்டமாகக் கொடுக்கப் பணித்தார்கள். இத்தொகை குற்றவாளிப் பையனுடைய தகப்பனிடமிருந்து “வசூல்” செய்யப்பட்டது. . இதே மாதிரியாக, ஒருவன் மானையெய்தற்கு அம்பு விடுகையில், இடையில் • Ep. An. Ttep for 1901-2. No. 223 of 1902.