பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். குறைந்த நிலம்' என்பதனாலும், இன்னம் மற்றச் சாஸனங்களாலும்' குலோத்துங்கன் (1) 16-வது வருஷத்தில் நிலமளக்கப்பட்டதென்றும், இரண்டு வருஷங்கழிந்தபின் 18வது ஆண்டில் வரியேற்படுத்தப் பட்ட தென்றும் "உடையார் சுங்கந்தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு கஅ-வது இறைகட்டின காணிக்கடன்”+ என்பதனாலும் நன்குபுலப்படும். இக்காலத்து நிலம் எவ்வளவு நுட்பமாயளக்கப்பட்டதென்பது, "ஆக இறையிலி நீங்குநிலம் முக்காலே இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் அரையே இரண்டு மா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன் ராஜகேசரியோ டொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக்கடவநெல்” என்பதனால் விளங்கும். இதிற்குறித்துள்ள நிலத்தின் விஸ்தீர்ணம் 52,125,500,000 வேலி, இந் லெந்தான் இறையிலியாக க்ேகப்பட்டது. தானஞ்செய்யப்பட்ட நிலங்கள் தேவதானம், சாலாபோகம், பட்ட விருத்தி, பள்ளிச்சந்தம் எனப் பலபெயர்பெறும். இவற்றுள் தேவ தானம் என்பது ஆரிய தேவாலபங்களுக்குக் கொடுக்கப்படும் நிலம். சாலாபோகமென்பது அறச்சாலைகட்காக விடப்படும் நிலம். பட்ட விருத்தி என்பது பிராமணர்கட்குத் தானஞ் செய்தது. பள்ளிச்சந்த மென்பது ஜைன பௌத்தப்பள்ளிகட்கு அளித்தது. அரசன் ஊர் களைத் தானஞ் செய்வதாயின், அவற்றிலுள்ள இறையிலி நிலங்களை நீக்கியே செய்வன். “ஊர்நத்தமும் ஸ்ரீகோயில்களும், குளங்களும், ஊடறுத்துப்போன வாய்க் கால்களும், பறைச்சேரியும், கம்மாளச்சேரி யும், சுடுகாடும்" $ முதலியன நீக்கவேண்டியவை. இவையெல்லாம் நீக்கி அரசன் தன்வரிக்கூறிடுவார்க்கு அறிவிப்ப அவர்களிடமிருந்து வரும் கட்டளைப்படி வரியிலார் தம் பொத்தகங்களில் இவ்வூர்கள்

  • திருவீழிமிழலை. . 1 ஷ ஊர். 1 S. 1. I. Vol. II. $ S. I. I. Vol. II. p. 43.