பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். போல-நம்மவரும் மோசம் போகின்றனர். என்னை இவர் தம் அறிவு? இவ்வாறு பழங்கோயில்களைப் பாழாக்குவதால் உண்டாகும் நஷ்டம் இவ்வளவு என்பது தெரியுமானால் அநகால் அவ்வாற இடியாதொழி வார்களோ தெரிந்திலது. ஆனால் இக்காலத்தில் நடக்கும் அத்தியாயத் தைப்போல அக்காலத்தே நடத்த முடியாது. ஏனெனில், ஒருவன் ஒருகோயிலைப் புதுப்பிக்கவெண்ணினனாயின், அக்கோயிற் குரிய நாட்டதி காரியிடம் தன்னெண்ணத் தைத் தெரிவிக்கவேண் டும். அவன் அரசனுக் கறிவிப்பான். அரசனும், நாயனார் வீரநாசிங்கதேவர்க்கு யாண்டு நாற்ப "தாவது ஐப்பசிமாதம் இருபதாந்திய தி கோயிலாழ்வார்க்கு கோயிலுக்குக்கோயில் செய்ய தேசாந்திரிகளில் திருப்புல்லாணிதாஸர் “ஆரம்பிக்கையில் முன்பத்தை கோயில் ஆழ்வாரில் கல்வெட்டுப்படி எடுத்து, முதல் பிராகாரத்து வடக்குரிசையில் புறவாயிலே கல்வெ “ட்டுவிப்பதென்று தானத்தாக்கு நாயனார் திருமுகம் வருகையில் “திருமுகப்படி கல்வெட்டுவதென்று தானமாக பெமிக்க இவ்வாண் "டை சித்திரமாதம் உஉ-ந் தியதி வெள்ளிக்கிழமை உத்திராடத்து “நாள் கல்வெட்டினபடி” * "ஆளுடையார்கோயிலில் திருவெதிரம்பலத்துக் குறடு பொன்செய்யுமிடத்து இவ்விடத்துக் கல்வெட்டுக்குப் படியெடுத் துத் தொண்டைமான் தான் நிச்சயித்த இடத்திலே கல்வெட்டக் கடவ தாகச் சொல்லி" என்பவைபோன்ற கட்டளை யை அனுப்புவான். அதனை யொட்டிப் பழங்கோயிலிலுள்ள சாஸனங்களைத் தம் செலவில் ஒலைகளில் எடுத்தெழுது வித்துக்கொண்டு, கோவிலைக்கட்டி முடித்தபின் அதன் பேரில் அதிகாரிகள் காட்டுமிடத்தே திரும்பவும் பழையகல்வெட்டுக் களைப் பொறிக்கவேண்டும். இவ்வாறு பழஞ்சாஸனங்களை மறுபடியும் எழுதுங்கால் “இச்சிரி விமானமிடித்துக் கட்டுங்கால் கண்ட சிலா லேகைப்படி" யென்று ஆரம்பித்துத்தான் அவற்றின் பிரதிகளை வெட்டுவது வழக்கம். ' செந்தமிழ் தொகுதி-3-பக்கம்-105. t. S. 1, 1, Vol. III, 99. இவ்வாறு திருப்பணி செய்ததில் திரும்ப வெழுதிய சாஸனங்களென்று கூறுமிடங்கள் பல. அவைகளுள், திருவல்லம், திருமழபாடி, குடிமியான்மலை, திருக்குற்றாலம். திருப்பதி, திண்டிவன முதலி யன் அடங்கும்.