உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுஎ சோழவமிசசரித்திரச்சுருக்கம். கும் கரைக்குக் கண்காணி செய்கிற அபிமான ...... க்கும் சிங்களராயர் சொன்னமையில் விலையாவணஞ் செய்துகொடுத்தோம். பற்பல காலங்களில் பர் பலவிடங்களை இராஜதானியாக்கிக்கொண்டு சோழர்கள் அரசாண்டு வந்தனர். மு.நன் முதல் (அஃதாவது கி. பி. 250-முதல் விஜயாலபன் கால வரை) உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சீபுரம் முதலியவை இராஜதானிகளாயிருந்தன. விஜயாலயன் தங்சாவூரைக் கைக்கொண்டு அதனைத் தலைநகராக்கினான். * அதுவே இராஜேந்திரசோழன் ஆட்சியின் மத்தியகாலம் வரை இராஜதானியாக விருந்தது. அவ்வாசன் காலத்தே கங்கைகொண்டசோழபுரம் கட்டப் பட்டதும் அஃது இராஜதானியாகிப் பின்னுள்ளவர்களால் உபயோகிக் கப்பட்டுவந்தது. விஜயாலயன் சந்ததியார் காவிரிப்பூம்பட்டினத்தை யேனும், உறையூரையேனும் எக்காலத்தாயினும் இராஜதானியாகக் கொண்டிருந்தார்களென்பது வியாங்கவில்லை. இராஜதானி பிற் பெரியபண்டாரமொன்றும், கோயில்கடோறும் ஒரு பண்டாரமும் வைக்கப்பட்டிருந்தன. இராஜதானியிலுள்ள, அரச னது பண்டாரத்துக்கு வரும் பணம், படையாளர்க்கும் உத்தியோகஸ் தர்க்கும் மாத நிவேதனம் கொடுத்தற்கும், அமானச்செலவுக்கும், இராஜ்யத்தில் நன்மையுண்டாகும் விஷயத்திற்செய்யவேண்டிய பெருக்த செலவுகட்கும் உபயோகப்படுவது போலத் தோன்றுகிறது. கோயில் களிலுள்ள பண்டாரத்தில், அவற்றுக்கு விட்ட இறையிலிநிலங்களின் வருவா டாலும் பலர்சொரிக்கும் நன்கொடைகளாலும் பணஞ்சேரும். இப்பணத்திற கோயிர் செலவுபோக, மிகுதியும் நாட்டுக் குடிகளின் க்ஷேமத்துக்குப் பயம் பட்டுவந்தது. நிலம் சீர்திருத்தவனும், இறை ப்பணம் செலுத்தவேனும் பணமில்லாத அவசரகாலத்து, குடிகள் தம் நிலத்தைக் கீழீடாகவைத்துக் கோயிற் பண்டாரத்திற் பணம்பெறு வதுவழக்கம். - இவ்வாறு பெற்ற பணத்துக்குப் பலிசை கோயிலுக்கு வேண்டும் கற்பூரமோ எண்ணெயோ எதையேனும் சபையார் பணித்த வண்ணம் கொடுக்கக்கடவர்.

  • Ep. An. Rep. for 1906-6 Tiruvalangadu plates, t Agrioultural loans on landmortgage,